பொது செய்தி

தமிழ்நாடு

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டுமா? மின்வாரிய சலுகையால் விவசாயிகள் 'ஷாக்'

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

பல்லடம்: பல்லடத்தில், 19 ஆண்டு இடைவெளிக்கு பின், இலவச மின் இணைப்புக்கான அனுமதி வழங்கப்பட்டிருப்பது, விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.பல்லடம் பகுதியில் உள்ள விவசாயிகள் பலர், கடந்த, 2001ல், இலவச மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கு, 19 ஆண்டு இடைவெளிக்கு பின், தற்போது, மின்வாரியத்தின் அனுமதி கிடைத்துள்ளது.
இது, விவசாயிகளுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், சலுகை கைகூடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.பல்லடம் மின்வாரிய செயற்பொறியாளர் கோபால் கூறுகையில், ''பல்லடம் தாலுகாவில், 2001 முதல் 2003 வரை பெறப்பட்ட, 230 விவசாய மின் இணைப்புக்கான விண்ணப்பங்களுக்கு, முன்னுரிமை அடிப்படையில் அனுமதி கிடைத்துள்ளது.விதிமுறைப்படி, விவசாயிகள், ஏற்கனவே கொடுத்துள்ள வரைபடம், விளைநிலம் உள்ளிட்டவை, அதே நிலையில் இருக்க வேண்டும். இதுதொடர்பான விசாரணைக்கு பின், மின் இணைப்பு வழங்குவதற்கான உத்தரவு கிடைக்கப்பெறும்,'' என்றார்.
விவசாயிகள் சிலர் கூறியதாவது;கடந்த, 2001ம் ஆண்டு இருந்ததை போன்றே, தற்போது, விளைநிலங்கள் இருக்க சாத்தியமில்லை. பல காரணங்களால், விவசாயிகள், தங்கள் நிலத்தை விற்றிருப்பர். அல்லது மகன், பேரன் உள்ளிட்ட வாரிசுகள் வசம் சென்றிருக்கும். 19 ஆண்டுகள் கழித்து, இலவச மின் இணைப்புக்கு அனுமதி கிடைத்துள்ள நிலையில் விதிமுறைப்படி, எத்தனை பேர் பயன்பெறுவர் என்பது, கேள்விக்குறிதான்.இருப்பினும், அனுமதிக்கப்பட்ட இலவச மின் இணைப்பை, தகுதி அடிப்படையில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X