சுவீடன் சிறார் பள்ளிகள் திறப்பு; ஆனால் கொரோனா தாக்கம் இல்லை..!| Coronavirus in Sweden: Schools to open amid rise in cases | Dinamalar

சுவீடன் சிறார் பள்ளிகள் திறப்பு; ஆனால் கொரோனா தாக்கம் இல்லை..!

Updated : ஜூலை 20, 2020 | Added : ஜூலை 20, 2020
ஸ்டாக்ஹோம்: கொரோனா தாக்கம் உலக அளவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது உலக நாடுகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் சிறார் பள்ளிகள் திறக்க பல நாட்டு அரசுகள் அனுமதி மறுக்கின்றன. கொரோனா குழந்தைகள் மூலமாக அதிக அளவில் பரவும் எனப்படுகிறது.ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள், கொரோனா தாக்கத்தை புரிந்து கொள்ளும் அளவிற்கு

ஸ்டாக்ஹோம்: கொரோனா தாக்கம் உலக அளவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது உலக நாடுகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் சிறார் பள்ளிகள் திறக்க பல நாட்டு அரசுகள் அனுமதி மறுக்கின்றன. கொரோனா குழந்தைகள் மூலமாக அதிக அளவில் பரவும் எனப்படுகிறது.latest tamil newsஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள், கொரோனா தாக்கத்தை புரிந்து கொள்ளும் அளவிற்கு பக்குவம் இல்லாதவர்கள். இவர்களுக்கு சமூக விலகலை கடைபிடிக்க அறிவுறுத்தி அதனைப் பின்பற்றுவது என்பது இயலாத காரியம்.

எனவே கொரோனா தாக்கம் முடியும்வரை சிறார்கள் பள்ளி செல்லக்கூடாது என ஐரோப்பிய நாடுகளில் கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஐரோப்பிய நாடான சுவீடனில் சிறார்களுக்கான பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இதர ஐரோப்பிய நாடுகளில் பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. ஆனால் ஒரு கருத்துக்கணிப்பின் முடிவில் ஸ்வீடனில் பள்ளி செல்லும் சிறார்கள் மூலமாக பரவ வாய்ப்பில்லை எனத் தெரியவந்துள்ளது.

இந்த முடிவுகள் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளன. இந்த ஆராய்ச்சிக்காக பின்லாந்து, ஸ்வீடன் ஆகிய இரு நாடுகளில் கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. பின்லாந்தில் சமூக விலகலை கடுமையாகக் கடைப்பிடிக்கிறது.

அதேசமயத்தில் ஸ்வீடனில் அவ்வளவாகக் கடைப்பிடிக்கப்படவில்லை. ஊரடங்கும் சற்று தளர்த்தப்பட்டது. ஒரு வயதிலிருந்து 19 வயது குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் இடையே இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இவர்கள் மூலமாக சமூகப்பரவல் ஆகும் வாய்ப்பு மிக குறைவு என இந்த ஆய்வு கூறுகிறது.

இந்த ஆய்வின் முடிவுகள் ஸ்வீடன் நாட்டின் தேசிய சுகாதார நிறுவனத்தின் இதழில் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் பின்லாந்தின் சுகாதார மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகமும் இதனை வெளியிட்டுள்ளது.


latest tamil newsமற்ற பணிகளில் இருப்போரைக் காட்டிலும் சிறார்கள் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணிபுரிபவர்கள் மூலம் பரவுவது குறைவு என இந்த ஆய்வு கூறுகிறது. 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் சமூகப் பரவலுக்கு உதவும் அளவுக்கு சிறார்கள் உதவமாட்டார்கள். சிறார்கள் மூலமாக பெரியவர்களுக்கு கொரோனா பரவும் அபாயம் மிகக் குறைவு அல்லது முற்றிலும் இல்லாதது என்றே கூறலாம் என்கிறது இந்த ஆய்வு.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X