உலகை உலுக்கும் கொரோனா 6 லட்சத்தை தாண்டியது பலி

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

வாஷிங்டன் : 'கொரோனா' வைரசால் பலியானோர் எண்ணிக்கை, உலகம் முழுவதும், ஆறு லட்சத்தை தாண்டியுள்ளது; 1.42 கோடி பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

உலகெங்கும் பரவியுள்ள கொரோனா வைரசின் பாதிப்பு, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அமெரிக்கா, தென்னாப்ரிக்கா, ஆஸ்திரேலியா என, பல நாடுகளில் பாதிப்பு மிகத் தீவிரமாக உள்ளது.உலகெங்கும், 1.42 கோடி பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் மட்டும், 37 லட்சம் பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது. பிரேசிலில், 20 லட்சம், இந்தியாவில், 10 லட்சம் பேருக்கு மேல் வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளது.நேற்று முன்தினம் மட்டும், இரண்டு லட்சத்து, 59 ஆயிரத்து, 848 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில், உலகெங்கும் பலியானோர் எண்ணிக்கை, ஆறு லட்சத்தை தாண்டியுள்ளது. அமெரிக்காவில் மட்டும், ஒரு லட்சத்து, 40 ஆயிரத்து, 103 பேர் உயிரிழந்துள்ளனர்.அதற்கடுத்து பிரேசிலில், 78 ஆயிரத்து, 772 பேரும், பிரிட்டனில், 45 ஆயிரத்து, 358 பேரும் பலியாகி உள்ளனர். அதிக பாதிப்பு மற்றும் பலியில், அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. இந்த நிலையில், தென்ஆப்ரிக்காவில் பாதிப்பு திடீரென கடுமையாக உயர்ந்துள்ளது.

அங்கு, 3.50 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உலக அளவில் அதிக பாதிப்புள்ள நாடுகளில், ஐந்தாவது இடத்தில் தென் ஆப்ரிக்கா உள்ளது.'மேற்காசிய நாடான ஈரானில், 2.5 கோடி பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம்' என, அந்த நாட்டின் அதிபர், ஹாசன் ரூஹானி கூறியுள்ளார்.அங்கு, தற்போதைக்கு, 2.70 லட்சம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது.ரூ.164 லட்சம் கோடி திட்டம்கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பை சமாளிக்க, அமெரிக்காவில் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள மீட்பு நடவடிக்கைகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டன.

இந்த நிலையில், இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் அதிகபட்சமாக, 164 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டத்துக்கு, அந்த நாட்டின் பார்லிமென்ட் ஒப்புதல் அளித்துள்ளது. 85 குழந்தைகளுக்கு பாதிப்புஅமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், 3.17 லட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில், 3,865 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், சமீபத்தில், ஒரு வயதுக்குட்பட்ட, 85 குழந்தைகளுக்கு வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. சீனாவில் இரண்டாவது அலைஆசிய நாடான சீனாவின் ஜின்ஜியாங்க் மாகாணத்தின் உரும்கியில், மேலும், 13 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

திடீரென பாதிப்பு பரவிவருவதால், இரண்டாவது அலை உருவாகியுள்ளதாக, அங்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. உரும்கியில் மட்டும், 30 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதைத் தவிர, 41 பேருக்கு அறிகுறிகள் இல்லாமல் தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதிப்பு திடீரென உயர்ந்து வருவதால், ஜின்ஜியாங்க் மாகாணத்தில், வணிக வளாகங்கள், ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X