பொது செய்தி

தமிழ்நாடு

செயின்ட் பால்ஸ் கல்லுாரியில் கல்வி கட்டணம் செலுத்த சலுகை

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

கோவை;தடாகம் ரோடு, கே.என்.ஜி.புதுார் பிரிவில் அமைந்துள்ள, செயின்ட் பால்ஸ் மகளிர் கலை அறிவியல் கல்லுாரியில், கல்வி கட்டணத்துக்கு சலுகை அளிக்கப்படுகிறது.இது குறித்து, செயின்ட் பால்ஸ் மகளிர் கலை அறிவியல் கல்லுாரி மற்றும் மெட்ரிக் மேல்நிலைபள்ளி நிறுவனர் டேவிட் கூறியதாவது:எங்கள் கல்லுாரி மாணவியர் பல்கலை தேர்வுகளில், அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளனர். காரமடை, ஒண்டிப்புதுார், காருண்யா நகர், ஆனைகட்டி, தொண்டாமுத்துார், குனியமுத்துார், ஈச்சனாரி, போத்தனுார் மற்றும் சத்தி ரோடு பகுதிகளில் இருந்து, இலவச வாகனங்கள் இயக்கப்படுகின்றன. கல்வி கட்டணத்தை, 4 தவணைகளில் செலுத்தலாம். கல்விக்கடன் பெற்றுத்தருகிறோம்.மாவட்ட, மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் மாணவியருக்கு, கட்டணத்தில் சலுகை உண்டு; பிளஸ் 2 தேர்வில், 480 மதிப்பெண்ணுக்கு மேல் எடுக்கும் அனைத்து மாணவியருக்கும், ரூ.3,000 சலுகை உண்டு. கல்லுாரி வளாகத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய, ஹாஸ்டல் உள்ளது. 100 சதவீதம் வேலைவாய்ப்பு பெற்றுத்தருகிறோம்.ஆங்கில பயிற்சி, தையல், தட்டச்சு, தற்காப்புகலை, மொபைல்போன் பழுது பார்த்தல், அழகுக்கலை, எம்ப்ராய்டரி உள்ளிட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது; கட்டணம் வசூலிப்பதில்லை. வாரம் ஒருமுறை கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X