பாதியில் நிற்குது பழங்குடியினர் குடியிருப்பு: தடையில்லா சான்று கிடைப்பதில் சிக்கல்

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement
 பாதியில் நிற்குது பழங்குடியினர் குடியிருப்பு: தடையில்லா சான்று கிடைப்பதில் சிக்கல்

பந்தலுார்:பந்தலுார் அருகே, சேலக்குன்னா பழங்குடியின கிராமத்தில் குடியிருப்புகள் கட்ட தடையில்லா சான்று கிடைக்காததால், தொகுப்பு வீடு கட்டும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.நெல்லியாளம் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட சேலக்குன்னா பகுதியில் பழங்குடியின மக்கள், கடந்த பல தலைமுறைகளாக வசித்து வருகின்றனர். இவர்களின் குடியிருப்புகள் சேதமடைந்த காரணத்தால், நகராட்சி சார்பில் தலா, 2.10 லட்சம் ரூபாய் செலவில், 19 தொகுப்பு வீடுகள் கட்டும் பணி துவக்கப்பட்டது. பணி பாதியளவு நிறைவுபெற்ற நிலையில்,'வருவாய் துறையின், தடையில்லா சான்று பெற்றால் மட்டுமே நிதி வழங்க முடியும்,' என, நகராட்சி நிர்வாகம் திடீரென தெரிவித்துள்ளது. இப்பகுதிகள் வனத்தில் அமைந்துள்ளதால், வனம்; வருவாய் துறையினர் சான்று இதுவரை கிடைக்கவில்லை.இதனால்,தொகுப்பு வீடு கட்டும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது, குடிசை வீட்டில் வாழும் மக்கள், தற்போதைய மழையால் மிகவும் அவதிப்படுகின்றனர்.நகராட்சி பொறியாளர் வெங்கடாசலம் கூறுகையில்,''நிதி ஒதுக்கீடு செய்ய, வருவாய் துறை மூலம் தடையில்லா சான்று பெற்று தரவேண்டும்.சான்று பெற்று தந்தால் மட்டுமே தொடர்ந்து நிதி ஒதுக்கீடு செய்யவும், குடியிருப்பு பணிகளை நிறைவு செய்யவும் இயலும்,'' என்றார்.மக்கள் கூறுகையில்,'இதில் உள்ள சிக்கல்களுக்கு, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X