சம்பவம் செய்தி

தமிழ்நாடு

2 நாளில் 4 எம்.எல்.ஏ., பாதிப்பு தி.மு.க.,வை மிரட்டும் கொரோனா

Added : ஜூலை 20, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

வேலுார் : கடந்த இரண்டு நாட்களில், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் நால்வருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வேலுார்வேலுார் தொகுதி, தி.மு.க., - எம்.எல்.ஏ., கார்த்திகேயன், 59. இவர், சில நாட்களாக, காய்ச்சல், சளி, தலைவலியால் அவதிப்பட்டார். வேலுார் மாநகராட்சி சுகாதாரத் துறையினர், நேற்று முன்தினம், அவருக்கு சளி மாதிரி எடுத்து பரிசோதனை செய்தனர். நேற்று, அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.இதையடுத்து, வேலுார், சி.எம்.சி., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது குடும்பத்தினர், எம்.எல்.ஏ., அலுவலகம் மற்றும் கட்சி அலுவலகம் ஆகியவற்றில் பணியாற்றிய, 50க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்து, தனிமைப்படுத்தப்பட்டனர்.கார்த்திகேயன், 'சவுண்ட் சர்வீஸ்' மற்றும் ஓட்டல் நடத்தி வருகிறார். அங்கு பணியாற்றிய, 100க்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ராணிப்பேட்டைராணிபேட்டை தொகுதி, தி.மு.க., - எம்.எல்.ஏ., காந்தி, 72. காய்ச்சல், சளியால் பாதிக்கப்பட்ட இவர், நேற்று முன்தினம், அங்குள்ள தனியார் மருத்துவமனையில், கொரோனா பரிசோதனை செய்தார். நேற்று மாலை, 4:00 மணிக்கு, அவருக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து, வேலுார், சி.எம்.சி., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது குடும்பத்தினர், எம்.எல்.ஏ., மற்றும் கட்சி அலுவலகத்தில் பணியாற்றிய, 67 பேர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். திட்டக்குடிகடலுார் மாவட்டம், திட்டக்குடி தொகுதி, தி.மு.க., - எம்.எல்.ஏ., கணேசன், கொரோனா அறிகுறி காரணமாக, 16ம் தேதி, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் பரிசோதனை செய்தார்.

நேற்று முன்தினம் மாலை, அவருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.கிருஷ்ணகிரிகிருஷ்ணகிரி தொகுதி, தி.மு.க., - எம்.எல்.ஏ., செங்குட்டுவனுக்கும், தொற்று உறுதி செய்யப்பட்டு, நேற்று முன்தினம் கோவை, பி.எஸ்.ஜி., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இரண்டு நாட்களில், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் நால்வர், கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இவர்களிடம், அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின், தொலைபேசியில் நலம் விசாரித்தார். தமிழகத்தில் இதுவரை, நான்கு அமைச்சர்கள் உட்பட, ௧௬ எம்.எல்.ஏ.,க்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Baskar - Paris,பிரான்ஸ்
20-ஜூலை-202016:27:09 IST Report Abuse
Baskar இவர்களின் தலைவன் கோரோனோவையும் அரசையும் மிரட்டுகிறான். அதனால் கோபமடைந்த கோரோனோ இவர்களை துரத்துகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X