பூமியை கடக்கும் விண்கல் 'நாசா' அபாய எச்சரிக்கை

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

வாஷிங்டன் : 'வரும், 24ம் தேதி, ஒரு பெரிய விண்கல் பூமியை கடக்க உள்ளது' என, நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான, நாசா, நேற்று வெளியிட்ட அறிக்கை: பூமிக்கு அருகே, 75 லட்சம் கி.மீ., தொலைவு அல்லது அதற்கும் குறைவான துாரத்தில் கடக்கும் விண்கற்கள், அபாயகரமான விண்கற்கள் என, அழைக்கப்படுகின்றன. இந்நிலையில், அதுபோன்ற ஒரு பெரிய விண்கல், வரும், 24ம் தேதி, பூமிக்கு அருகே கடந்து செல்ல உள்ளது. இந்த விண்கல்லுக்கு, 2020 என்.டி., என, பெயரிடப்பட்டுள்ளது. இந்த விண்கல், 48 ஆயிரம் கி.மீ., வேகத்தில், பூமியை நோக்கி வந்துகொண்டு இருக்கிறது.

இந்த விண்கல், 170 மீட்டர் நீளமுள்ளது. இது, 50 லட்சம் கி.மீ., துாரத்தில் பூமியை கடக்க இருக்கிறது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, '2016 டி.ஒய்., 30 மற்றும் 2020 எம்.இ., 3' என்ற இரண்டு விண்கற்கள், நேற்று பூமியை கடந்து சென்றுள்ளன.இதில், 2016 டி.ஒய்., 30 விண்கல், 54 ஆயிரம் கி.மீ., வேகத்தில், 34 லட்சம் கி.மீ., தொலைவிலும், 2020 எம்.இ., 3 விண்கல், 16 ஆயிரம் கி.மீ., வேகத்தில், 56 லட்சம் கி.மீ., தொலைவிலும், பூமியை கடந்து சென்றுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X