பொது செய்தி

இந்தியா

கொரோனா தடுப்பு மருந்து சோதனை டில்லி எய்ம்ஸில் இன்று துவக்கம்

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

புதுடில்லி : -டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், கொரோனா பரவலை தடுக்கும், 'கோவாக்சின்' தடுப்பு மருந்து, இன்று முதல், மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட உள்ளது.

தெலுங்கானா மாநிலம், ஐதராபாதில் உள்ள, 'பாரத் பயோடெக்' நிறுவனம், ஐ.சி.எம்.ஆர்., எனப்படும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், என்.ஐ.வி., எனப்படும், தேசிய வைராலஜி நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து, கொரோனா தொற்றை தடுக்க, புதிய மருந்தை கண்டுபிடித்து உள்ளது. இதற்கு, 'கோவாக்சின்' என, பெயரிடப்பட்டுள்ளது.கொரோனா பரவலை தடுக்க, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள இந்த தடுப்பு மருந்தை, மனிதர்களுக்கு செலுத்தி, இரண்டு கட்டமாக சோதனை நடத்தப்பட உள்ளது. முதல் கட்டமாக, 375 பேருக்கு இந்த மருந்தை செலுத்தி சோதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை உட்பட, 12 மருத்துவமனைகளை, ஐ.சி.எம்.ஆர்., தேர்வு செய்துள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனையில் மட்டும், 100 பேருக்கு பரிசோதிக்கப்பட உள்ளது.இதற்கு, எய்ம்ஸ் நெறிமுறைகள் குழு அனுமதி வழங்கிஉள்ளது. இதையடுத்து, எய்ம்ஸ் மருத்துவமனையில், இன்று முதல், மனிதர்களுக்கு, கோவாக்சின் மருந்தை செலுத்தி சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. இது குறித்து, எய்ம்ஸ் மருத்துவமனையின் சமூக மருந்து பிரிவின் பேராசிரியர், டாக்டர் சஞ்சய் ராய் கூறியதாவது:கொரோனாவை தடுக்க, உள்நாட்டிலேயே தயாரிக்கப் பட்டுள்ள கோவாக்சின் தடுப்பு மருந்து, மனிதர்களுக்கு செலுத்தி சோதனை நடத்தப்பட உள்ளது. இந்த சோதனையில் பங்கேற்க, தன்னார்வலர்கள் சிலர் பதிவு செய்துள்ளனர்.

அவர்களுக்கு, 20ம் தேதி முதல், கோவாக்சின் மருந்தை செலுத்தி சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. நீண்ட கால நோய்கள் இல்லாதவர்கள், ஆரோக்கியமான உடல்நிலை கொண்ட, 18 வயது முதல், 55 வயதுக்குட்பட்டவர்கள், இந்த பரிசோதனையில் பங்கேற்கலாம். அவர்கள், தன்னார்வலர்களாக வரவேற்றப்படுகின்றனர். தன்னார்வலர்களாக வருவோர், கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்க கூடாது.பரிசோதனையில் பங்கேற்க விரும்புபவர்கள், Ctaiims.covid19@gmail.com என்ற, 'இ - மெயில்' முகவரி அல்லது, 7428847499 என்ற மொபைல் எண்ணுக்கு தகவல் அனுப்பலாம்.

இந்த மொபைல் எண்ணை தொடர்பு கொண்டும், சம்மதம் தெரிவிக்கலாம். பீஹார் மாநிலம், பாட்னா; ஹரியானா மாநிலம், ரோதக் ஆகிய நகரங்களில், இந்த சோதனை துவங்கிவிட்டது. இவ்வாறு அவர் கூறினார். 'ஹரியானா மாநிலம், ரோதக்கில் உள்ள பி.ஜி., மருத்துவமனையில், மனிதர்களுக்கு, கோவாக்சின் மருந்தை செலுத்தி பரிசோதித்து பார்க்கும் நடவடிக்கை துவக்கப்பட்டுள்ளது' என, அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் அனில் விஜ் தெரிவித்தார். 'முதல் கட்டமாக, மூன்று பேருக்கு இந்த மருந்து செலுத்தப்பட்டது; அவர்களுக்கு எந்தவிதமான பக்க விளைவுகளும் ஏற்படவில்லை' என்றும், அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X