பொது செய்தி

இந்தியா

செய்தி சில வரிகளில்...

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

கள்ளச் சந்தையில் கொரோனா மருந்துமும்பை: கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும், 'ரெம்டெசிவிர்' என்ற மருந்தை, கள்ளச் சந்தையில் விற்றதாக, மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில், ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். ஒரு குப்பியின் விலை, அதிகபட்சம், 5,400 ரூபாய். ஆனால், 30 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற இந்த கும்பலை, மும்பை போலீசுடன் இணைந்து, உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

வெடி வைத்து ஏ.டி.எம்.,மில் திருட்டுபன்னா: மத்திய பிரதேசத்தின், பன்னா மாவட்டத்தில் உள்ள ஒரு வங்கியின், ஏ.டி.எம்., இயந்திரத்தை, வெடி வைத்து தகர்த்து, அதிலிருந்த, 22 லட்சம் ரூபாயை இரண்டு மர்ம நபர்கள் திருடியுள்ளனர். ஏ.டி.எம்., மையத்தின் காவலாளியை, துப்பாக்கி முனையில் மிரட்டி, இந்த திருட்டில் ஈடுபட்டவர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.

சாலை விபத்தில், 6 பேர் பலிஆக்ரா: உத்தர பிரதேச மாநிலத்தில், லக்னோ - ஆக்ரா விரைவு சாலையில், காரும், பஸ்சும் மோதிய விபத்தில், ஆறு பேர் இறந்தனர். மேலும், 18 பேர் காயமடைந்தனர். பீஹாரில் இருந்து, டில்லிக்கு, புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்துச் சென்ற அந்த பஸ், விபத்தில் கவிழ்ந்ததே, அதிக பலிக்கு காரணம் என, கூறப்படுகிறது.

நுாதன முறையில் போதை பொருள் கடத்தல்புதுடில்லி: பாகிஸ்தானில் இருந்து, நுாதன முறையில் கடத்தப்பட்ட, 64 கிலோ எடையுள்ள, ஹெராயின் போதைப் பொருள், பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்புரில் உள்ள நதியில் மீட்கப்பட்டது. போதைப் பொருள்கள், தண்ணீர் புகாத பையில் வைத்து, ஆகாயத் தாமரை செடியால் அதை மறைத்து, நதியில் விடப்படும். நதியின் ஓட்டத்தில், அந்த பை நீரின் மீது மிதந்து வரும். எல்லை பாதுகாப்புப் படையினர், இந்த கடத்தலை கண்டுபிடித்துள்ளனர்.

நக்சல் தாக்குதலில், 25 பேர் காயம்ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவடா மாவட்டத்தில் கிராமவாசிகளை, நக்சலைட் பயங்கரவாதிகள், கம்புகளால் அடித்து தாக்கியுள்ளனர். இதில், 25 கிராமவாசிகள் காயமடைந்தனர். கிராமத்தில் வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ள கோரிக்கை விடுத்ததால், அவர்களை நக்சலைட்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X