தாய், மகள் தீக்குளித்த வழக்கில் 5 பேர் கைது

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

லக்னோ : உ.பி.,யில், முதல்வர் அலுவலகம் முன், தாய், மகள் தீக்குளித்த வழக்கில், அவர்களை துாண்டிவிட்டதாக காங்., பிரமுகர் உள்ளிட்ட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.

உ.பி.,யில், முதல்வர், யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தின், அமேதி மாவட்டம், ஜாமோ காவல் நிலைய எல்லை பகுதியில் வசிக்கும், சபியா, 55, அவரது மகள் குடியா ஆகியோருக்கும், அங்கு வசிக்கும் சிலருக்கும் இடையே, கழிவுநீர் கால்வாய் பயன்பாடு தொடர்பாக, தகராறு ஏற்பட்டது.இதில் உரிய நடவடிக்கை கோரி, லக்னோவில், முதல்வர் அலுவலகம் முன், தாயும், மகளும் தீக்குளித்தனர்.இதில் படுகாயமடைந்த அவர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில், தாயின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இது தொடர்பாக, அகில இந்திய மஜ்லிஸ் - -இ - -இத்தேஹாதுல் முஸ்லிம் அமைப்பின், மாவட்ட தலைவர், கதீர் கான் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இப்பிரச்சனையில் உடனடி நடவடிக்கை எடுக்காத, மூன்று போலீசார், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.இந்நிலையில், தாய், மகளை தீக்குளிக்க துாண்டியதாக, காங்கிரஸ் தலைவர் அனுாப் படேல் உள்ளிட்ட நான்கு பேர் மீது, லக்னோ போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X