சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நிறுத்தாமல் 'பறந்த' லாரி: துரத்திப்பிடித்து அபராதம்

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement
 நிறுத்தாமல் 'பறந்த' லாரி: துரத்திப்பிடித்து அபராதம்

அன்னூர்:நிறுத்தாமல் சென்ற லாரியை, அதிகாரிகள் துரத்திப் பிடித்து அபராதம் விதித்தனர்.அன்னூர், பயணியர் மாளிகை முன், நேற்று, துணை தாசில்தார் நித்திலவல்லி, வருவாய் ஆய்வாளர் சங்கர்லால் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள், வாகனங்களை நிறுத்தி விசாரித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு மினி லாரி, நிற்காமல் சென்றது.ஜீப்பில் துரத்திப் பிடித்தனர். லாரியின் முன்புறம் 'காய்கறி' என எழுதி இருந்தது. ஆனால் லாரியில் தொழிற்சாலை பொருட்கள் இருந்தன. அதிகாரிகள் அபராதம் வசூலித்தனர். 'லாரியை நிறுத்தி வைக்க வேண்டும். 20ம் தேதி தான் இயக்க வேண்டும்' என, எச்சரித்து அனுப்பினர்,நேற்று, இரு சக்கர வாகனங்களில், தேவை இல்லாமல் வந்தவர்களிடம், தலா, 200 ரூபாயும், நான்கு சக்கர வாகனங்களில் வந்தவர்களிடம், தலா, 500 ரூபாயும், என, 6,400 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X