பொது செய்தி

இந்தியா

மோடியை பின்தொடரும் 10.5 கோடி பேர்

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

புதுடில்லி : பிரதமர் நரேந்திர மோடியின், 'டுவிட்டர்' மற்றும் 'இன்ஸ்டாகிராம்' சமூக வலைதள கணக்குகளை, 10.5 கோடிக்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர்.

சமூக ஊடகங்கள் வழியாக, மக்களை சென்றடைவதில் புகழ் பெற்றவர், பிரதமர், நரேந்திர மோடி. பல்வேறு முக்கிய தகவல்களை, பொதுமக்களுடன் பகிர்ந்து கொள்ள, சமூக வலைதளங்களை, அவர் அதிகம் பயன்படுத்துகிறார். அவர் உரையாற்றும் நிகழ்வுகள் அனைத்தும், அவரின் சமூக வலை தள பக்கங்களில் நேரடியாக ஒளிபரப்பாகின்றன. பிரதமர் மோடி, 2009ம் ஆண்டு, ஜன., மாதம், டுவிட்டரில் இணைந்த நிலையில், 2,354 கணக்குகளை பின்தொடர்கிறார். அதே நேரம், அவரை பின்தொடர்வோரின் எண்ணிக்கை, கடந்த ஆண்டு செப்., மாதம் ஐந்து கோடியாக இருந்தது;

தற்போது, ஆறு கோடிக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. அதேபோல், பிரதமரின், 'இன்ஸ்டாகிராம்' சமூக வலைதள கணக்கை, 4.5 கோடிக்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர். பிரதமர் அலுவலகம் தரப்பில் செயல்பாட்டில் உள்ள, டுவிட்டர் சமூக வலைதளத்தை, 3.7 கோடி பேர் பின்தொடர்கின்றனர்.காங்கிரஸ் எம்.பி., ராகுல், 2015ம் ஆண்டு ஏப்., மாதம், டுவிட்டரில் இணைந்தார். அவரை, தற்போது, 1.5 கோடிக்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X