பேருதான் 'கிரீன் பார்க்' அவென்யூ; புல்லா சுகாதார சீர்கேடு!

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

குப்பையால் புகைராமநாதபுரம், காவேரி நகரில், சேகரித்த குப்பையை, குப்பை கிடங்குக்கு கொண்டு செல்லாமல், துாய்மை பணியாளர்கள் அங்கேயே, குவித்து எரிக்கின்றனர். இதனால், ஏற்படும் புகை மற்றும் துர்நாற்றத்தால், குடியிருப்புவாசிகள் அவதிப்படுகின்றனர்.- குணா, ராமநாதபுரம்.

குழாயில் கசிவு; வீணாகுது குடிநீர்மாநகராட்சி, 68வது வார்டுக்கு உட்பட்ட, ராமநாதபுரம், ஒலம்பஸ், கருப்பண்ணன் ரோட்டில், சாக்கடை கால்வாயை ஒட்டியுள்ள குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளது; குடிநீர் வீணாக சாக்கடை கால்வாயில் ஓடுகிறது.- லீலாகிருஷ்ணன், கருப்பணன் ரோடு.

சாக்கடை கால்வாய் அடைப்புமாநகராட்சி, 48வது வார்டுக்கு உட்பட்ட, ரத்தினபுரி, சாதிக் பாட்சா வீதியில், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவுநீர் தேங்கியுள்ளது; சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- நடராஜன், சாதிக்பாட்சா வீதி.

ரோடு படுமோசம்மாநகராட்சி, 25வது வார்டுக்கு உட்பட்ட, மரக்கடை தியாகராய புதுவீதி -2ல், சாலை குண்டும் குழியுமாக உள்ளது. லேசான மழை பெய்தால் கூட, இக்குழியில் நீர் தேங்கி விடுகிறது. மக்கள் நடந்து செல்லக்கூட வழியின்றி அவதிப்படுகின்றனர்.- உமாமகேஸ்வரி, தியாகராய புதுவீதி 2.

கால்வாயை துார்வாரணும்பீளமேடு, தண்ணீர் பந்தல், எஸ் பெண்டில் உள்ள, சாக்கடை கால்வாய் கற்களால், அடைப்பட்டுள்ளது. சாக்கடை கழிவுநீர் தடையின்றி செல்லும் வகையில், இக்கால்வாயை துார் வார வேண்டும்.- பழனிசாமி, தண்ணீர் பந்தல்.

விளக்கு எரிவதில்லைமாநகராட்சி, 58வது வார்டுக்கு உட்பட்ட, ராமானுஜ நகர் பிரதான சாலையில் உள்ள, மின் கம்பத்தில்(எண்:560), விளக்கு எரிவதில்லை. மின் வாரியத்தில் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை.- பாரதி, அலமேலு நகர்.

குப்பை அள்ளப்படுவதில்லைசுங்கம், சிந்தாமணி பின்புறம், முனுசாமி நகருக்கு, துாய்மை பணியாளர்கள் வருவதில்லை. இதனால், இப்பகுதியில், குப்பை குவிந்துள்ளது.- கதிர்வேல், சுங்கம்.

கொரோனாவுக்கு வழிவகுக்கும் கடைகள்மலுமிச்சம்பட்டி - செட்டிபாளையம் ரோட்டில், சாலையோரம் செயல்படும், கடைகள் முன், கொரோனா அச்சம் சிறிதும் இன்றி, சமூக இடைவெளி இல்லாமல் மக்கள் கூடுகின்றனர். சுகாதாரத்துறையினர் இப்பகுதியை கண்காணித்து, கூட்டத்தை அப்புறப்படுத்த வேண்டும்.- மலர்மன்னன், மலுமிச்சம்பட்டி.

வங்கி முன் குழி;மக்கள் அவதிபேரூர் ரோடு, செல்வபுரத்தில் உள்ள, தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி முன்புறம், சாக்கடை கால்வாய் பணிக்காக தோண்டப்பட்ட குழியில், மக்கள் தவறி விழுகின்றனர். பணியை விரைந்து முடித்து, குழியை மூட வேண்டும்.- ரமேஷ், செல்வபுரம்.

கிரீன் பார்க் அவென்யூவில் சுகாதார கேடுமாநகராட்சி, 63வது வார்டுக்கு உட்பட்ட, உழவர் சந்தைக்கு எதிரில் உள்ள, கிரீன் பார்க் அவென்யூவில், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவு தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- கண்ணதாசன், கிரீன்பார்க் அவென்யூ.

சாக்கடை கால்வாயை சீரமைக்கணும்அவிநாசி ரோடு ேஹப்ஸ் - காமராஜ் ரோடு, மணீஸ் தியேட்டர் பஸ் ஸ்டாப் பகுதியில், சாக்கடை கால்வாய் சிதிலமடைந்து, கழிவு செல்ல வழியின்றி உள்ளது. சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இக்கால்வாய் சீரமைக்க வேண்டும்.- சங்கர், காமராஜ் ரோடு.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X