சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொரோனா பரவலில் புதிய உச்சம் ஒரே நாளில், 4,979 பேர் பாதிப்பு

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

சென்னை : தமிழகத்தில் புதிய உச்சமாக, நேற்று ஒரே நாளில், 4,979 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 1.70 லட்சத்தை தாண்டியுள்ளது.

தற்போது, 50 ஆயிரத்து, 294 பேர் சிகிச்சையில் உள்ளனர்.சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:தமிழகத்தில், 112 கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன. இந்த ஆய்வகங்களில், 52 ஆயிரத்து, 993 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், எப்போதும் இல்லாத வகையில், நேற்று புதிய உச்சமாக, 4,979 பேருக்கு தொற்று உறுதியானது. சென்னையில், 1,254; செங்கல்பட்டில், 306; காஞ்சிபுரத்தில், 220; மதுரையில், 206; திருவள்ளூரில், 405; விருதுநகரில், 265 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. மேலும், 23 மாவட்டங்களிலும், கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

மார்ச் முதல் நேற்று வரை, 19.32 லட்சம் பேருக்கு நடத்திய பரிசோதனையில், ஒரு லட்சத்து, 70 ஆயிரத்து, 693 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. அதிகபட்சமாக சென்னையில், 85 ஆயிரத்து, 859; செங்கல்பட்டில், 9,658; மதுரையில், 8,251; திருவள்ளூரில், 9,110 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில், ௮,௫௦௭ பேர், 12 வயதுக்கு உட்பட்ட சிறார்கள். கொரோனா பாதிப்பில் இருந்து, நேற்று, 4,059 பேர் மீண்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து, இதுவரை, ஒரு லட்சத்து, 17 ஆயிரத்து, 915 பேர் குணமடைந்துள்ளனர். சென்னையில் மட்டும், 69 ஆயிரத்து, 982 பேர் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.தற்போது, 50 ஆயிரத்து, 294 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சில தினங்களில் இறந்தவர்களில், சென்னையில், 27 பேர்; செங்கல்பட்டு, மதுரையில், தலா, எட்டு பேர் உட்பட, 78 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கொரோனாவுக்கு, சென்னையில், 1,434 பேர் உட்பட, மாநிலம் முழுவதும் இதுவரை, 2,481 பேர் இறந்துள்ளனர். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X