இரண்டாவது சீசன் நாற்று நடவு பணி துவக்கம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இரண்டாவது சீசன் நாற்று நடவு பணி துவக்கம்

Added : ஜூலை 20, 2020
Share
 இரண்டாவது சீசன்  நாற்று நடவு பணி துவக்கம்

ஊட்டி;ஊட்டியில் இரண்டாவது சீசனுக்கான நாற்று நடவு பணி துவங்கியது.ஊட்டியில் நடப்பாண்டு கொரோனா காரணமாக, கோடை சீசன் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், இரண்டாம் சீசனுக்காக நாற்று நடவு பணிகள் துவங்கியது. இம்முறை, 2.5 லட்சம் மலர் நாற்றுக்கள், பூங்கா முழுவதிலும் நடவு செய்ய திட்டமிட்டுள்ளனர். 7,000 தொட்டிகளில் மலர் அலங்காரங்கள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.இதை தவிர, 3,000 தொட்டிகளில் லில்லி மலர்கள் மட்டும், தொட்டிகளில் நடவு செய்யப்பட்டு, தற்போது தோட்டக்கலை நர்சரியில் பராமரிக்கப்பட்டு வருகிறது.தோட்டக்கலைத் துறை இணை இயக்குனர் சிவசுப்ரமணிய சாம்ராஜ் கூறுகையில், '' இரண்டாவது சீசனுக்கான மலர் நாற்றுக்கள், நடவு பணி துவக்கப்பட்டது. 2.5 லட்சம் மலர்கள் பூங்கா முழுவதிலும் தயார்படுத்தப்படுகிறது. அதற்குள் கொரோனா பிரச்னை முடியும் என்ற நம்பிக்கை அனைவரிடையேயும் உள்ளது,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X