பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு தொகுப்பு

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

பந்தலுார்:பந்தலுாரில் மாற்றுத் திறனாளிகளுக்கு உணவு தொகுப்பு வழங்கப்பட்டது.மாவட்ட மாற்று திறனாளிகள் அலுவலகம் சார்பில், பந்தலுாரில், 80 முதல் 100 சதவீதம் வரை பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அலுவலர் விஜயன் வரவேற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மலா தேவி தலைமை வைத்து, 25 பயனாளிகளுக்கு உணவு பொருட்களை வழங்கினார்.நிகழ்ச்சியில், 'மாநில பேரிடர் மேலாண்மை திட்டம் சார்பில், மாவட்டத்திற்கு 1.5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அனைத்து பகுதியிலும் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு, 1,000 ரூபாய் மதிப்பிலான உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது,' என, தெரிவிக்கப்பட்டது.நிகழ்ச்சியில், கூடலுார் ஆர்.டி.ஓ., ராஜ்குமார், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மலர்விழி, தாசில்தார் மகேஸ்வரி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் லோகநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X