தமிழ்நாடு

ஊரடங்கால் அடங்கா நம்மூரில் கொரோனா வைரஸ் :மக்களிடம் இருக்கிறது தீர்வு!

Updated : ஜூலை 20, 2020 | Added : ஜூலை 20, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
 ஊரடங்கால் அடங்கா நம்மூரில் கொரோனா வைரஸ் :மக்களிடம் இருக்கிறது தீர்வு!

முழு ஊரடங்கும் இல்லாத, முழு தளர்வும் இல்லாத இப்போதைய நிலையில், கோவை மாநகரில் பெரும்பாலான கடைகள் திறந்திருக்கின்றன. நிரம்பி வழியும் கூட்டம், எந்த கடையிலும் இல்லை. பஸ் போக்குவரத்து இல்லையெனினும், இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் கணிசமாக இயக்கப்படுகின்றன.
இப்படி இருக்கும் நிலையிலும், மாவட்டத்தின் வெவ்வேறு பகுதிகளில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட வண்ணம் இருக்கிறது. கட்டுப்பாட்டு பகுதிகள், ஆங்காங்கே ஏற்படுத்தப்பட்டபடி இருக்கின்றன.எவற்றாலும், கொரோனா கட்டுப்படுத்தப்பட்டதாக தெரியவில்லை. அரசு அலுவலர்கள், போலீசார் தொடர்ந்து பாதிக்கப்படுவது, கொரோனா தொற்றின் ஆபத்தை வெளிக்காட்டுவதாக உள்ளது.
இப்போதைய நிலையில், தொழில் துறையை மீட்க வேண்டும்; உணவு உற்பத்தியை பெருக்க வேண்டும் என்பது முக்கியம்.இது சார்ந்து, இத்துறை சார்ந்தவர்களிடம் பேசினோம்...'கொடிசியா' தலைவர் ராமமூர்த்தி கூறியதாவது: முதல்வர் பழனிசாமி கோவை வந்தபோது, இனி 'லாக் டவுன்' தேவையில்லை என்று தொழில்துறை சார்பில் வலியுறுத்தினோம். இன்னொரு முறை 'லாக் டவுன்' போட்டால், தொழில் துறை தாங்காது. ஞாயிறு ஊரடங்கில் தவறே கிடையாது. மற்ற நாட்களில் தேவையில்லை. விதிமுறைகளை பின்பற்றி, கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும் என்பதே எங்கள் கருத்து.'மக்களிடம் உள்ளது
தீர்வு'
கொரோனாவை கட்டுப்படுத்த, அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. போதிய விழிப்புணர்வும் ஏற்படுத்தியாகி விட்டது. கூட்டமாக சேரும் இடங்களில் மட்டும் தான் நோய் பரவுகிறது. எனவே கூட்டம் சேராமல், மக்கள் தவிர்த்தாலே நோய் பரவாது.தொழில் நிறுவனங்களை பொறுத்தவரை, விதிமுறைகள் சரியாக கடைபிடிக்கப்படுகின்றன. இப்போதைய நிலையில், நம் மக்கள் விழிப்போடு இருந்து, விதிமுறைகளை சரியாக பின்பற்றினால் மட்டுமே, நோய் பரவலை தடுக்க முடியும்.இவ்வாறு, ராமமூர்த்தி கூறினார்.
கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க தலைவர் கந்தசாமி கூறியதாவது:ஊரடங்கு விதிகள், அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். ஆனால் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்றெல்லாம் வித்தியாசம் பாராமல், செல்வாக்கு இருக்கும் பலர், ஊரடங்கு விதிகளை, காற்றில் பறக்க விடுகின்றனர்.ஊரடங்கு போட்ட பிறகும் தான், நோய் பரவுகிறது; எனவே, ஊரடங்கால் மட்டும் நோய் கட்டுக்குள் வந்து விடாது. வைரஸ் தொற்றை தவிர்க்க, கூட்ட நெரிசல் கூடாது என்பது தான், உலகம் முழுவதும் கண்டறியப்பட்ட உண்மை. ஆகவே, வெளியே நடமாடுபவர்கள், சமூக இடைவெளியை பின்பற்றினால், கொரோனாவை அழித்து விடலாம்.இவ்வாறு, கந்தசாமி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NoBs - chennai,இந்தியா
21-ஜூலை-202010:35:07 IST Report Abuse
NoBs அரசு செய்வது ஓரளவுக்குத்தான் பலன் மக்களிடம்தான் இந்த தொற்றை முழுவதும் நிறுத்தும் வலிமை. ஆனால் அறியாமையாலும் மெத்தனத்தாலும் மக்கள் மாக்கள் போல நடந்துகொண்டால் விளைவு மிக மோசமாக போகும் நிலை. பரிணாம வளர்ச்சியின் உச்சத்தில் மனிதன் என்பதை நம்புவதை விடச்செய்யும் நம் செயல்கள். தீதும் நன்றும் பிறர் தர வாரா.....
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN RAGHAVAN - Coimbatore,இந்தியா
20-ஜூலை-202010:53:21 IST Report Abuse
VENKATASUBRAMANIAN RAGHAVAN கோவையில் முழு ஊரடங்கு ஒரு மாதம் அவசியம் தேவை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X