எல்லை பாதுகாப்பு நடவடிக்கை விமானப்படையினர் ஆலோசனை

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

புதுடில்லி : சீன எல்லையில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, நாட்டின் விமானப்படை உயர்மட்ட தளபதிகள் பங்கேற்கும்ஆலோசனை கூட்டம், நாளை மறுநாள் நடக்கிறது.

ஜம்மு - காஷ்மீரின் லடாக்கில், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், சீன ராணுவத்தினரின் அத்துமீறிய தாக்குதலில், நம் ராணுவ வீரர்கள், 20 பேர், வீர மரணம் அடைந்தனர்.இந்நிலையில், சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் உள்ள பிரச்னைகள் குறித்து, விமானப்படை உயர் அதிகாரிகளின் இரண்டு நாள் ஆலோசனை கூட்டம், நாளை மறுநாள் துவங்குகிறது.விமானப்படை தலைமை மார்ஷல், ராகேஷ் குமார் சிங் பதவ்ரியா தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், ஏழு உயர்மட்ட தளபதிகளும் பங்கேற்கின்றனர்.இம்மாத இறுதியில், பிரான்சில் இருந்து வரும் ரபேல் போர் விமானங்களுக்கான தளங்களை எல்லை பகுதியில் அமைப்பது, சீன எல்லையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, அவர்கள் விவாதிக்க உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X