வேகலை சோறு... ஓடுது சாம்பாரு! அம்மா உணவகம் பற்றி மக்கள் புகார்

Added : ஜூலை 20, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 வேகலை சோறு... ஓடுது சாம்பாரு! அம்மா உணவகம் பற்றி மக்கள் புகார்

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் அம்மா உணவகத்தில், மதியம் வழங்கப்படும் உணவு, தரமில்லாமல் உள்ளதாக, பொதுமக்கள் புகார் கூறினர்.மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே, உள்ள அம்மா உணவகத்தை, நகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது.
இங்கு காலை, மதியம் இரு வேளை நகராட்சி சார்பிலும், மாலையில் கோவை மாவட்ட ஜெ., பேரவை சார்பிலும் என, மூன்று நேரமும் இலவசமாக, உணவு வழங்கப்படுகிறது. சமீபகாலமாக மதிய உணவில் தரமில்லை என, பொதுமக்கள் புகார் கூறி வந்தனர்.
இதையடுத்து, மேட்டுப்பாளையம் தாசில்தார் சாந்தாமணி, அம்மா உணவகத்தில் ஆய்வு செய்தார்.அப்போது அவரிடம் அங்கிருந்தவர்கள், 'சாப்பாடு ஆரம்பத்துல நல்லா இருந்துச்சு. இப்ப வர, வர டேஸ்ட்டே இல்லை. சோறு விதை விதையா இருக்கு. விழுங்கவே முடியலை. சாம்பார் தண்ணியா ஓடுது. என்ன செய்ய, இந்த காலத்துல இதுவாவது கிடைக்குதே...' என, நொந்தபடி் கூறினர்.
மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனர் சுரேஷ் குமார் கூறுகையில், ''அம்மா உணவகத்தில் காலையில், 1200 இட்லி மற்றும் பொங்கல், 300 நபர்களுக்கும், மதியம் முட்டையுடன் சாம்பார் சாதம், தயிர் சாதம், 400 பேருக்கும், மாலையில் சாப்பாடு, 200 பேருக்கும் தினமும் வழங்கப்பட்டு வருகிறது.ஊரடங்கு பிரச்னைக்குப் பிறகு, அம்மா உணவகத்தில் உணவு சாப்பிடுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தரமான உணவு வழங்கும் படி, பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-ஜூலை-202000:06:19 IST Report Abuse
மன்னர் வயக்ரா பின்ன உனக்கு ஓசில வடை பாயாசம் மீன் நண்டு எல்லாம் கேப்ப....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X