பொது செய்தி

தமிழ்நாடு

தளர்வுகளுடன் ஊரடங்கு

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

சென்னை : தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு காரணமாக, நேற்று தமிழகம் முழுதும், போக்குவரத்து முடங்கி, கடைகள் மூடப்பட்டு, வெறிச்சோடி காணப்பட்டது.

தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, இன்று முதல் அமலுக்கு வருகிறது.தமிழகத்தில், கொரோனா தொற்று பரவலை தடுக்க, இம்மாதம், 31ம் தேதி வரை, பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மக்களின் வாழ்வாதாரம் கருதி, பல்வேறு தளர்வுகளையும், அரசு அறிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை மட்டும், எவ்வித தளர்வுகளும் இல்லாத, முழு ஊரடங்கு அமல்படுத்தப் படுகிறது. இதன்படி, மாநிலம் முழுதும் நேற்று, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது; கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. வாகனங்களின் போக்குவரத்தும் முடங்கியதால், சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன.


அரசு உத்தரவை மதித்து, பொதுமக்கள் தங்கள் வீடுகளில் முடங்கி, முழு ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு அளித்தனர். இன்று முதல், தளர்வுகளுடன் கூடிய, வழக்கமான ஊரடங்கு, அமலுக்கு வருகிறது. கடைகள் திறக்கப்படும்; அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், தொழிற்சாலைகள் வழக்கம் போல் செயல்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X