தங்க கடத்தல் வழக்கின் முக்கிய புள்ளி கைது

Added : ஜூலை 20, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

திருவனந்தபுரம் : கேரளாவை கலக்கி வரும் தங்க கடத்தல் வழக்கின் முக்கிய புள்ளியாக கருதப்படும் பைசல் பரீத், துபாயில் கைது செய்யப்பட்டார். இவரை, இந்தியாவுக்கு நாடு கடத்தி அழைத்துவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. 'சஸ்பெண்ட்'இங்குள்ள ஐக்கிய அரபு எமிரேட்சின் துாதரக கிளை அலுவலகத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி, சிலர் தங்க கடத்தலில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது. திருவனந்தபுரம் விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் நடத்திய சோதனையில், துாதரக அலுவலக பெயருக்கு அனுப்பப்பட்டிருந்த, 30 கிலோ தங்கம் கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், கேரள மாநில தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றிய ஸ்வப்னா, அவரது நெருங்கிய கூட்டாளி சந்தீப் நாயர், துாதரக அலுவலகத்தில் ஏற்கனவே பணியாற்றிய சரித் ஆகியோருக்கு, இதில் தொடர்பிருப்பது தெரியவந்தது.

இந்த கும்பல், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவியதும் உறுதி செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள், இந்த மூவரையும் சமீபத்தில் கைது செய்தனர். கேரள முதல்வரின் முதன்மை செயலராகவும், மாநில தகவல் தொழில்நுட்ப துறை செயலராகவும் பணியாற்றி வந்த சிவசங்கருக்கு, இந்த கும்பலுடன் தொடர்பிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் அதிரடியாக, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

விசாரணை : கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில், கேரள மாநிலம் கொடுங்கலுாரைச் சேர்ந்த பைசல் பரீத் என்பவர், ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய் நகரில் இருந்தபடி, தங்க கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டு வந்தது தெரிய வந்தது.கடந்த ஒரு ஆண்டில், இந்த கும்பல், 200 கிலோ தங்கத்தை கடத்தியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, பைசல் பரீத் பற்றிய தகவல், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசுக்கு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், துபாயின் ரஷியா பகுதியில் இருந்த பைசல் பரீத்தை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது, தங்க கடத்தல், போலி ஆவணங்கள் தயாரித்தல், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவுதல் ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. தகவல்பைசல் பரீத்தை இந்தியாவுக்கு நாடு கடத்தி அழைத்து வரவும், என்.ஐ.ஏ., அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர். அவரது பாஸ்போர்ட் முடக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், வேறு நாடுகளுக்கு பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்திய அதிகாரிகள் சார்பில், துபாய் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் ஸ்வப்னாதங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா, சந்தீப் நாயர் ஆகியோரை, என்.ஐ.ஏ., அதிகாரிகள், கொச்சியிலி ருந்து திருவனந்தபுரத்துக்கு நேற்று முன்தினம் அழைத்து வந்தனர். தலைமைச் செயலகம் அருகேயுள்ள, 'ஹீதர் பிளாட்ஸ்' என்ற அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் தான், இந்த கும்பல், தங்க கடத்தலுக்கான திட்டம் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள அதிகாரி சிவசங்கர் தான், இவர்களுக்கு இந்த வீட்டை வாடகைக்கு எடுத்து தந்ததாகவும் தெரிகிறது.

இங்கு அழைத்து வரப்பட்ட ஸ்வப்னா மற்றும் சந்தீப்பிடம், அதிகாரிகள் எட்டு மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தினர். இந்த வீட்டிலிருந்து சில முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. இதுதவிர, ஸ்வப்னா வசித்த குடியிருப்புக்கும், அவரை அழைத்துச் சென்று, அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raghavan - chennai,இந்தியா
20-ஜூலை-202009:44:22 IST Report Abuse
Raghavan 200 கிலோ கடத்தும்வரை கஸ்டம்ஸ் அதிகாரிகள் என்ன செய்து கொண்டுயிருந்தார்கள். பங்கு சரியாக போகலையோ என்னமோ? கடவுளுக்குத் தான் வெளிச்சம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X