அரசு கலை கல்லுாரிகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரசு கலை கல்லுாரிகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

Added : ஜூலை 20, 2020
Share
கோவை:அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் பட்டப்படிப்புகளில் சேர, இன்று முதல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பம் செய்யலாம்.அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளுக்கு, விண்ணப்பம் செய்ய வேண்டிய நாள், சான்றிதழ் சரிபார்ப்பு பதிவேற்றம் செய்யும் தேதி, கட்டணம் செலுத்தும் முறை உள்ளிட்ட விபரங்களை, கல்லுாரி கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.இதன்படி அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில், இன்று

கோவை:அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் பட்டப்படிப்புகளில் சேர, இன்று முதல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பம் செய்யலாம்.அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளுக்கு, விண்ணப்பம் செய்ய வேண்டிய நாள், சான்றிதழ் சரிபார்ப்பு பதிவேற்றம் செய்யும் தேதி, கட்டணம் செலுத்தும் முறை உள்ளிட்ட விபரங்களை, கல்லுாரி கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.இதன்படி அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில், இன்று முதல் ஆன்லைன் வாயிலாக வரும், 31ம் தேதி வரை, www.tngasa.in, www.dceonline.org ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம்.சான்றிதழ்களை வரும், 25ம் தேதி முதல், ஆக., 5ம் தேதி வரை பதிவேற்றம் செய்யலாம். பொதுப்பிரிவினர், 48 ரூபாய் விண்ணப்ப கட்டணம் மற்றும், 2 ரூபாய் பதிவு கட்டணத்தை இணையதள வாயிலாக செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு, விண்ணப்ப கட்டணம் கிடையாது. பதிவு கட்டணம், 2 ரூபாய் மட்டும் செலுத்த வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X