சிறுவாணி ரோட்டில் நீளமான குப்பை மேடு! திறந்தவெளி பாராக மாறியதால் 'பாட்டில் காடு'

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement
 சிறுவாணி ரோட்டில் நீளமான குப்பை மேடு! திறந்தவெளி பாராக மாறியதால் 'பாட்டில் காடு'

கோவை:வடவள்ளி-சிறுவாணி ரோட்டின் இரு புறமும், திறந்தவெளி 'பார்' ஆக மாறியிருப்பதால், பாட்டில் குப்பை மலையாக குவிந்து வருகிறது.கோவை-மருதமலை ரோட்டில், பி.என்.புதுார் முல்லை நகர் போலீஸ் செக்போஸ்ட்டிலிருந்து அஜ்ஜனுார் வரை செல்லும் சிறுவாணி ரோடு, மூன்று கி.மீ., துாரம் நீளமுடையது.நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை அகற்ற, கோர்ட் உத்தரவிட்டபோது இந்த ரோட்டுக்கு, இரண்டு கடைகள் மாற்றப்பட்டன. அதற்குப் பின், இந்த ரோட்டில் போக்குவரத்து அதிகரித்தது.அதிகரித்த மதுக்கடைகள்!குடிநீர் வடிகால் வாரியம் மட்டுமே பயன்படுத்தி வந்த இந்த ரோட்டை, கடந்த ஆண்டில் மாநகராட்சி நிர்வாகம், பல கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தியது. மேம்படுத்தப்பட்ட பின், டாஸ்மாக் மதுக்கடைகளின் விற்பனை, பல மடங்கு அதிகமானது.கடைக்கு வெளியே நின்று குடிகாரர்கள் குடிப்பதாக, புகார்கள் குவிந்தன. மக்கள் எதிர்ப்பு காரணமாக ஒரு மதுக்கடை மட்டும் மூடப்பட்டது. மற்றொரு கடை இப்போதும் இயங்கிவருகிறது.இந்தக் கடையைத் தவிர்த்து, அஜ்ஜனுார் ரோட்டிலும் மற்றொரு மதுக்கடை உள்ளது. இவ்விரு கடைகளிலும் சரக்கு வாங்கும் 'குடி'மகன்கள், சிறுவாணி ரோட்டின் இரு புறமும் உள்ள காலியிடங்களை திறந்தவெளி 'பார்' ஆக மாற்றி விட்டனர்.குடிக்க வேண்டியது...எறிய வேண்டியது!பொதுமக்கள் நடமாட்டம், போலீஸ் ரோந்து பற்றி எந்த பயமும் இல்லாமல், பகல் நேரத்திலேயே பகிரங்கமாக குடிக்கின்றனர். பாட்டில்களை அங்கேயே எறிகின்றனர்.இவ்வாறு கொட்டப்பட்டுள்ள பல ஆயிரம் பாட்டில்கள், குப்பை மலையாகக் குவிந்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக கட்டடக்கழிவுகளும், பயன்பாடற்ற மற்ற குப்பைகளும் ரோட்டின் இரு புறமும் கொட்டப்பட்டு வருகிறது. இதனால், நீளமான குப்பை மேடாக, சிறுவாணி ரோடு மாறி வருகிறது.வடவள்ளி இன்ஸ்பெக்டர் மணிவண்ணனிடம் கேட்டதற்கு, "இதுபற்றி நிறையவே புகார்கள் வருகின்றன. சிறுவாணி ரோட்டில் போலீசார் தொடர் ரோந்துப்பணிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பொது இடங்களில் மது அருந்துபவர்கள் மீது, வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. அங்குள்ள மதுக்கடையை அகற்ற வேண்டுமென்று, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றிருக்கிறோம்,'' என்றார். போலீசார் அதிரடி நடவடிக்கை எடுப்பதோடு, மாநகராட்சி நிர்வாகமும் இந்த ரோட்டில் 'மாஸ் கிளீனிங்' முகாம் நடத்தி, ரோட்டின் இரு புறங்களையும் துாய்மைப்படுத்த, நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.ஆளும்கட்சியினர் சிலர் இப்பகுதியில் வாங்கியுள்ள நிலங்களின் மதிப்பை அதிகப்படுத்தவே, இந்த ரோடு மேம்படுத்தப்பட்டதாக புகார்கள் எழுந்தன. மேம்படுத்தப்பட்ட பின், டாஸ்மாக் மதுக்கடைகளின் விற்பனை, பல மடங்கு அதிகமானது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X