கர்நாடகாவில் ஒரே நாளில் 4,120 பேருக்கு புதிதாக கொரோனா| 4,120 new coronavirus cases in Karnataka | Dinamalar

பொது செய்தி

இந்தியா

கர்நாடகாவில் ஒரே நாளில் 4,120 பேருக்கு புதிதாக கொரோனா

Updated : ஜூலை 20, 2020 | Added : ஜூலை 20, 2020 | கருத்துகள் (2)
Share
பெங்களூரு: கர்நாடகாவில் ஒரே நாளில் 4,120 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியானது. இதனால் மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 63,772 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 91 பேர் கொரோனாவுக்கு பலியானதையடுத்து அங்கு கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,331 ஆனது. அதே நேரம் மாநிலம் முழுவதும் இதுவரை 22,000க்கும் அதிகமானோர் தொற்றிலிருந்து

பெங்களூரு: கர்நாடகாவில் ஒரே நாளில் 4,120 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியானது. இதனால் மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 63,772 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 91 பேர் கொரோனாவுக்கு பலியானதையடுத்து அங்கு கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,331 ஆனது. அதே நேரம் மாநிலம் முழுவதும் இதுவரை 22,000க்கும் அதிகமானோர் தொற்றிலிருந்து குணமடைந்தனர்.latest tamil newsபெங்களூரு மற்றும் புறநகர்ப்பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்து காணப்படுகிறது. மாநிலத்தின் 50 சதவீதத்திற்கும் மேலான தொற்று இங்கு தான் கண்டறியப்படுகிறது. இதுவரை கொரோனாவுக்கு பலியானவர்களில் 640க்கும் மேற்பட்டவர்கள் பெங்களூருவை சேர்ந்தவர்கள்.

நகரில் 2,014 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் ஏற்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் இருந்து வருகின்றன. தற்போது நகரில் 8,600 படுக்கைகள் அறிகுறிகளுடன் கூடிய கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. வெண்டிலேட்டர் வசதியுடன் கூடிய படுக்கைகள் 358 தயாராக உள்ள நிலையில் 69 படுக்கைகளில் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


latest tamil newsஇந்நிலையில் நகரில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் தனியார் மருத்துவமனைகளில் 50 சதவீத படுக்கைகளை அரசுக்கு ஒதுக்கும் படி மாநில முதல்வர் பி.எஸ். எடியூரப்பா கேட்டுக் கொண்டுள்ளார். கடந்த சனியன்று மட்டும் 14,929 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X