சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவில் முன் டயர் எரிப்பு: கண்டித்தவர்கள் மீது வழக்கு

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

கோவை:ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி, பா.ஜ.,வை சேர்ந்த, 110 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கோவை என்.எச்., ரோடு ஐந்து முக்கில் உள்ள மாகாளியம்மன் கோவில், ரயில்வே ஸ்டேஷன் முன் உள்ள விநாயகர் கோவில் உட்பட நான்கு கோவில்கள் முன், மர்மநபர் ஒருவர் டயர்களை கொளுத்தி வீசினார். கோவில் பொருட்களும் சேதப்படுத்தப்பட்டன.இதுகுறித்து தகவல் அறிந்த பா.ஜ., மற்றும் இந்து முன்னணியை சேர்ந்தவர்கள், கோவில் முன் கூடினர். மர்மநபர்களை கைது செய்ய வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊரடங்கின் போது சட்டவிரோதமாக ஒன்று கூடியதால் போலீசார், 110 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X