பொது செய்தி

தமிழ்நாடு

நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம்: வாழும் கலை அமைப்பு புது தகவல்

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

கோவை:'கோவை உள்ளிட்ட, 9 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டுள்ள நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தை, மாநிலம் முழுவதும் கொண்டு செல்வதற்கு தயார்' என்று வாழும் கலை அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு, 'வேக் அவர் லேக்', 'டார்கெட் ஜீரோ' அமைப்பினர் சார்பில், நிலத்தடி நீர் செறிவூட்டுதல் தொடர்பான கருத்தரங்கம் நேற்று நடந்தது.இதில், வாழும் கலை அமைப்பு நிர்வாகி சந்திரசேகரன் பேசியதாவது:கர்நாடகாவில், பெங்களூரு அருகே குமுதவதி ஆற்றிலும், வேலுார் மாவட்டத்தில் பாலாறின் கிளை ஆறுகளில் ஒன்றான நாக நதியிலும், நீரோட்டத்தை மீட்கும் திட்டத்தை வாழும் கலை அமைப்பு, முன்னோடி திட்டமாக மேற்கொண்டது. இதில் பெரும் வெற்றி கிடைத்தது. நாக நதியின் நீர்ப்பிடிப்பு பகுதி 366 சதுர கிலோமீட்டர். இதில், 844 ஓடைகள் இருக்கின்றன. வறண்டு போயிருந்த அந்த ஓடைகளை, புனரமைக்கும் திட்டம் முதலில் தொடங்கப்பட்டது.ஒவ்வொரு ஓடையிலும், 150 மீட்டர் இடைவெளியில், ஒரு செறிவூட்டும் கிணறு அமைக்கப்பட்டது. அதற்கு முன்னதாக, ஒரு கருங்கல் தடுப்பணை ஒன்றும் அமைக்கப்படும். இப்படி தொடர்ச்சியாக அமைத்ததன் காரணமாக, 15 ஆண்டுகளாக தண்ணீர் இல்லாத கிணறுகளில் கூட, ஊற்று எடுத்து விட்டது.கோவையில் அன்னுார், சர்க்கார் சாமக்குளம், தொண்டாமுத்துார் வட்டாரங்களில், கவுசிகா, நொய்யல் ஆறுகளில் பணி நடக்கிறது. இத்தகைய பணி, 9 மாவட்டங்களில், அரசின் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர் மூலம், வாழும் கலை அமைப்பின் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படுகிறது. தமிழகம் முழுவதும் இந்த திட்டத்தை கொண்டு செல்ல தயாராக இருக்கிறோம்.இவ்வாறு, சந்திரசேகரன் பேசினார். தன்னார்வலர்கள் பலர் பங்கேற்றனர்.ஒரு கிராமத்தில் தொடங்கிய இந்த பணி, பிறகு ஒரு வட்டாரத்தில் 21 ஊராட்சிகளில் செய்யப்பட்டது. அங்கு 349 செறிவூட்டும் கிணறுகள் அமைக்கப்பட்டன. அதில் கிடைத்த வெற்றியின் பயனாக, இப்போது மாவட்டம் முழுவதும், பணிகள் நடக்கின்றன. அப்பகுதியில் சராசரியாக, 18 மீட்டர் நிலத்தடி நீர் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. - சந்திரசேகரன்வாழும் கலை அமைப்பு

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X