பொது செய்தி

தமிழ்நாடு

'விவசாய தொழிலாளர்களை கூட்டி வர இ-பாஸ் தேவை'

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

கோவை:'பிற மாவட்டங்களில் இருந்து விவசாய தொழிலாளர்களை அழைத்து வர, இ-பாஸ் வழங்க வேண்டும்' என்று விவசாயிகள் சங்கத்தினர் கோரியுள்ளனர்.கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் கந்தசாமி, கோவை கலெக்டருக்கு அனுப்பிய மனு விவரம்:கோவை மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராக உள்ள வெங்காயம் உள்ளிட்ட பயிர்களை, அறுவடை செய்வதற்கு, போதுமான பணியாளர்கள் கிடைப்பதில்லை. இதனால் அறுவடை தாமதமாகி, விவசாயிகள் பெரும் இழப்புக்கு உள்ளாகின்றனர்.தென்மேற்குப் பருவமழை துவங்க உள்ளதால் விளைபொருட்கள், வயலில் அழுகும் நிலை உருவாகியுள்ளது. ஆண்டுதோறும் இந்த சீசனில், திண்டுக்கல், தாராபுரம் பகுதிகளில் இருந்து கூலியாட்களை அழைத்து வந்து, அறுவடை பணியை முடிப்பது வழக்கம்.கொரோனா தொற்று காரணமாக, இவ்வாறு பிற மாவட்ட தொழிலாளர்களை அழைத்து வர முடியவில்லை. எனவே, விவசாய தொழிலாளர்களை பிற மாவட்டத்தில் இருந்து, அழைத்து வருவதற்கு, இ-பாஸ் வழங்க வேண்டும்.இவ்வாறு, கந்தசாமி கோரியுள்ளார்.ஆண்டுதோறும் இந்த சீசனில், திண்டுக்கல், தாராபுரம் பகுதிகளில் இருந்து கூலியாட்களை அழைத்து வந்து, அறுவடை பணியை முடிப்பது வழக்கம்.கொரோனா தொற்று காரணமாக, இவ்வாறு பிற மாவட்ட தொழிலாளர்களை அழைத்து வர முடியவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X