அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதல்வர் ஆவது எப்போது? ஜோதிடம் பார்க்கும் சசிகலா

Updated : ஜூலை 20, 2020 | Added : ஜூலை 20, 2020 | கருத்துகள் (58)
Share
Advertisement
சென்னை: பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா, விரைவில் விடுதலையாவார் என சொல்லப்படுகிறது. 'வெளியே வந்தால், தமிழக அரசியலில் நிச்சயம் மாற்றம் வரும்' என, சசிகலா ஆதரவாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.சசிகலாவின் அரசியல் எதிர்காலம் எப்படியிருக்கும் என்பதில் ஆர்வம் காட்டும் அவரது ஆதரவாளர்கள், தமிழகத்தில் பிரபல ஜோதிடரிடம் ஆலோசனை நடத்தியுள்ளனர். இதோடு நிற்காமல், வட மாநில

சென்னை: பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா, விரைவில் விடுதலையாவார் என சொல்லப்படுகிறது. 'வெளியே வந்தால், தமிழக அரசியலில் நிச்சயம் மாற்றம் வரும்' என, சசிகலா ஆதரவாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.latest tamil newsசசிகலாவின் அரசியல் எதிர்காலம் எப்படியிருக்கும் என்பதில் ஆர்வம் காட்டும் அவரது ஆதரவாளர்கள், தமிழகத்தில் பிரபல ஜோதிடரிடம் ஆலோசனை நடத்தியுள்ளனர். இதோடு நிற்காமல், வட மாநில ஜோதிடர்களையும் அணுகியுள்ளனர். சமீபத்தில், சசிகலா ஆதரவாளர் ஒருவர், கங்கை கரையில் உள்ள காசிக்கும், அலகாபாதிற்கும் சென்று வந்துள்ளார்.

காசியில் பிரபல ஜோதிடர் ஒருவரைப் பார்த்து, சசிகலாவின் ஜாதகத்தைக் காட்டி, எதிர்காலம் குறித்து கேட்டிருக்கிறார். அந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி, காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு பூஜையும் நடத்தப்பட்டுள்ளதாம். இதே போல, அலகாபாதிலும், திரிவேணி சங்கமத்திலும் பூஜைகள் நடத்தப்பட்டுள்ளதாம். 'சசிகலா எப்போது முதல்வர் ஆவார்; அதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்' என்றெல்லாம், ஜோதிடர்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளதாம்.


latest tamil newsசசிகலாவின் சிறைத் தண்டனை முடிந்த நாளிலிருந்து, ஆறு ஆண்டுகளுக்கு அவர் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது சட்டம். இது, அந்த ஆதரவாளர்களுக்கு தெரியாதது தான் விந்தை!

Advertisement
வாசகர் கருத்து (58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Visu Iyer - chennai,இந்தியா
25-ஜூலை-202016:17:48 IST Report Abuse
Visu Iyer இங்கே ஒரு விஷயம் கவனிக்கப் பட வேண்டியது இருக்கிறது.. அதைப் பற்றி யாருமே சொல்லவில்லை..
Rate this:
Cancel
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
22-ஜூலை-202016:03:40 IST Report Abuse
தமிழர்நீதி அடித்த கொள்ளை போதாது , அடித்ததை காத்திட அரசியல் அதிகாரம் வேண்டியிருக்கு . சசிகலா ஒரு ஜாதிக்கு வேலை தொழில் என்று உதவிசெய்து அந்த சாதியை தனக்கு ஆதரவாக வைத்துக்கொண்டார் .அந்த தகுதி இல்லாமல் ஊழலில் விழுந்தோர், பதவி உயர்வுக்காக சசிகலா முதல்வர் ஆகணும் என்று தவிக்கிறார்கள்
Rate this:
Cancel
தத்வமசி - சென்னை ,இந்தியா
22-ஜூலை-202010:19:07 IST Report Abuse
தத்வமசி காசிக்கு போனாலும் கருமம் தொலையாது. அப்படிப்பட்ட விஷயங்களை தான் இவர் செய்துள்ளார். கடவுளுக்கு மன்னிக்கும் தன்மை உண்டு. ஆனால் அந்த தகுதி நமக்கு உண்டா என்பதை நாம் தான் உணர வேண்டும். கடவுள் எப்போதும் தான் இட்ட சட்ட திட்டங்களை மீறமாட்டார். உண்மையான ஆத்ம சுத்தி இல்லை. அதனால் கடவுள் மன்னிக்க மாட்டார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X