முதல்வர் ஆவது எப்போது? ஜோதிடம் பார்க்கும் சசிகலா| Sasikala's release may be a threat to TN CM | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதல்வர் ஆவது எப்போது? ஜோதிடம் பார்க்கும் சசிகலா

Updated : ஜூலை 20, 2020 | Added : ஜூலை 20, 2020 | கருத்துகள் (58)
Share
சென்னை: பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா, விரைவில் விடுதலையாவார் என சொல்லப்படுகிறது. 'வெளியே வந்தால், தமிழக அரசியலில் நிச்சயம் மாற்றம் வரும்' என, சசிகலா ஆதரவாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.சசிகலாவின் அரசியல் எதிர்காலம் எப்படியிருக்கும் என்பதில் ஆர்வம் காட்டும் அவரது ஆதரவாளர்கள், தமிழகத்தில் பிரபல ஜோதிடரிடம் ஆலோசனை நடத்தியுள்ளனர். இதோடு நிற்காமல், வட மாநில

சென்னை: பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா, விரைவில் விடுதலையாவார் என சொல்லப்படுகிறது. 'வெளியே வந்தால், தமிழக அரசியலில் நிச்சயம் மாற்றம் வரும்' என, சசிகலா ஆதரவாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.



latest tamil news



சசிகலாவின் அரசியல் எதிர்காலம் எப்படியிருக்கும் என்பதில் ஆர்வம் காட்டும் அவரது ஆதரவாளர்கள், தமிழகத்தில் பிரபல ஜோதிடரிடம் ஆலோசனை நடத்தியுள்ளனர். இதோடு நிற்காமல், வட மாநில ஜோதிடர்களையும் அணுகியுள்ளனர். சமீபத்தில், சசிகலா ஆதரவாளர் ஒருவர், கங்கை கரையில் உள்ள காசிக்கும், அலகாபாதிற்கும் சென்று வந்துள்ளார்.

காசியில் பிரபல ஜோதிடர் ஒருவரைப் பார்த்து, சசிகலாவின் ஜாதகத்தைக் காட்டி, எதிர்காலம் குறித்து கேட்டிருக்கிறார். அந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி, காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு பூஜையும் நடத்தப்பட்டுள்ளதாம். இதே போல, அலகாபாதிலும், திரிவேணி சங்கமத்திலும் பூஜைகள் நடத்தப்பட்டுள்ளதாம். 'சசிகலா எப்போது முதல்வர் ஆவார்; அதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்' என்றெல்லாம், ஜோதிடர்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளதாம்.


latest tamil news



சசிகலாவின் சிறைத் தண்டனை முடிந்த நாளிலிருந்து, ஆறு ஆண்டுகளுக்கு அவர் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது சட்டம். இது, அந்த ஆதரவாளர்களுக்கு தெரியாதது தான் விந்தை!

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X