பொது செய்தி

தமிழ்நாடு

பழமைக்கு மாறி வரும் மக்கள்குடும்பம் சுருங்கியதால் உருவமும் சுருங்கியது

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement
 பழமைக்கு மாறி வரும் மக்கள்குடும்பம் சுருங்கியதால் உருவமும் சுருங்கியது

சிவகங்கை:புதுமையிலிருந்து பழமைக்கு மாறி வருகின்றனர் மக்கள். கூட்டுக்குடும்பம் சுருங்கியதால், அம்மி, உரல் உருவங்களும் சுருங்கியது.
மக்கள்இயந்திரமயமான வாழ்க்கைவாழ்ந்து வருகின்றனர். புதிய கண்டுபிடிப்புகளால் ஈர்க்கப்பட்டு சமையலுக்கு முற்றிலும் இயந்திரங்களானமிக்ஸி, கிரைண்டர்,குக்கர் போன்ற பொருட்களுக்கு மாறினர். இதன் பயன்பாடு கிராமப்புற மக்களையும் சென்றடைந்தது. மக்களுக்குஉடலுழைப்பு என்பது முற்றிலும் இல்லாமல் போனது.

சத்தில்லாத உணவை உண்டதால் பல்வேறு நோய்களுக்கு ஆட்பட்டுசிரமப்பட்டு வருகின்றனர். இதையெல்லாம் அறிந்த மக்கள் மீண்டும் பழமையான பொருட்கள் பயன்பாட்டுக்கு திரும்பியுள்ளனர்.கருங்கற்களினால் ஆன உரல், ஆட்டுக்கல், அம்மி ஆகியவற்றை விரும்பிவாங்குகின்றனர்.அரைக்கும் இயந்திரங்கள் பயன்படுத்தும் போது இயந்திரத்தின் வெப்பம் காரணமாக அரைக்கப்பட்ட பொருளின் தன்மையும் மாறுபடுகிறது.

அரைக்கப்படும் உணவுப்பொருளின் சுவையும் குறைகிறது.மீண்டும் இயற்கையின் பாதைக்கு மக்கள் திரும்பியதால்நுாறு ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரையிலான கருங்கற்களால் ஆன அம்மி, உரல்கள், சப்பாத்தி தேய்க்கும் கல், விற்பனைக்கு வந்துள்ளன. இதனை மக்கள் வாங்கி செல்கின்றனர்.

சுருங்கிவிட்ட குடும்பம்

ரவி, மதுரை சிற்ப கலைஞர் கூறியதாவது:

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சிற்பக்கலையும் பாதிக்கப்பட்டது.கல் சிற்பம் இயந்திரத்திலும், கைகளிலும் செதுக்கி தரப்படுகிறது.நுணுக்கமான வேலை என்பதால் ஒரு சிலையின் உயரம் அகலம் அடிப்படையில் ஒரு நாளிலும் முடிக்கலாம்,ஒரு மாதமும் ஆகும்.நாகர்கோவில் அருகே மைலாடியில் இருந்து கருங்கற்கள் வாங்கி வந்து சிற்பங்கள் செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே மக்கள் கேட்டுக்கொள்வதால் கற்களால் ஆன அம்மி, உரல்கள், மருந்து, வெற்றிலை இடிக்கும் உரல்கள் செய்து தருகிறோம்.

முன்பெல்லாம் கூட்டுக்குடும்பமாக இருப்பார்கள்.ஆட்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆட்டுக்கல், உரல், அம்மி இருந்தது. இன்று குடும்பங்கள் சுருங்கிவிட்டது. ஒரு குடும்பத்தில் 3 அல்லது 4 பேருக்கு மேல் காண்பது அரிது. அம்மி, உரல், ஆட்டுக்கல்அளவும்சுருங்கிவிட்டது. மக்களின் தேவைக்காக இதனை வாங்கி விற்பனை செய்கிறோம். கொரோனா ஊரடங்கு நேரத்தில் சிற்ப கலைஞர்களுக்கு வருமானம் கிடைக்கிறது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X