சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வட்டார போக்குவரத்து அலுவலகஓடுதளம் பராமரிப்பின்றி சேதம்

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement
 வட்டார போக்குவரத்து அலுவலகஓடுதளம் பராமரிப்பின்றி சேதம்

சிவகங்கை:சிவகங்கை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுனர்உரிமம் வழங்குவதற்கான சோதனை ஓடு தளம் சேதமடைந்துள்ளது. சுற்றுச்சுவர் இல்லாததால் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக உள்ளது.

சிவகங்கை வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் ஓடுதளம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தோட்டக்கலைத்துறை அலுவலகம் அருகே அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஓடு தளத்தில் வாகன ஓட்டுனர்களுக்கு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு உரிமம் வழங்கப்படும். இந்த ஓடு தளம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகளானதால் முறையான பராமரிப்பு இல்லாமல் முட்புதர் மண்டி சேதமடைந்துள்ளது.

இங்கு பார்வையாளர்களுக்கான கூடாரம் தகர கூரையால் அமைக்கப்பட்டுள்ளது. சேதம் அடைந்து உள்ளதால் வெயில், மழையில் பாதிக்கப்படுகின்றனர். ஓடு தளம் பகுதி சுற்றுச்சுவர் இன்றி திறந்த வெளியாக பாதுகாப்பின்றி இருப்பதால் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக உள்ளது.ஓடுதளத்தை சீரமைத்து சுற்றுச்சுவர் அமைத்து முறையாக பராமரிப்பு செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X