பொது செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கால் ஊராட்சியில் உருவாக்கியகாய்கறி தோட்டத்தில் விளைந்த காய்கறி

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement
 ஊரடங்கால் ஊராட்சியில் உருவாக்கியகாய்கறி தோட்டத்தில் விளைந்த காய்கறி

காரைக்குடி:காரைக்குடி அருகே உள்ள பெரியகொட்டகுடி ஊராட்சியில், ஊரடங்கை பயன்படுத்தி உருவாக்கிய காய்கறி தோட்டத்தில் விளைந்த காய்கறிகளை மக்கள் வாங்கிச் சென்றனர்.

சாக்கோட்டை ஒன்றியத்துக்குட்பட்ட பெரிய கொட்டகுடி ஊராட்சி தலைவர் தனபால். இவர், ஊரடங்கு நேரத்தில், மக்களுக்கு சொந்த செலவில் காய்கறிகளை வழங்கினார்.பின்னர் ஊரிலேயே காய்கறி தோட்டம் அமைக்க முடிவு செய்து2 ஏக்கரில் கருவேல மரங்கள் மண்டி கிடந்த இடத்தை சுத்தம் செய்து, கிராம மக்கள் உதவியுடன் காய்கறி தோட்டம் அமைத்தார்.

அதில், கீரைவகைகள், கத்தரி, வெண்டை, புடலை, பீர்க்கை, அவரை,தக்காளி, உள்ளிட்ட 10 வகை காய்கறிகள், பழக்கன்றுகள் பயரிட்டுள்ளனர்.ஊரடங்கில் உருவாக்கிய தோட்டத்தில், தற்போது வெண்டை, பீர்க்கை, புடலை, கொத்தவரை உள்ளிட்ட காய்கறிகள் விளைந்த நிலையில், அதனை கிராம மக்களுக்கு ஊராட்சி தலைவர் தனபால் மற்றும் தோட்டக்கலை அலுவலர் நிவேதா வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X