பொது செய்தி

தமிழ்நாடு

உப்பாற்றை சீரமைக்க ரூ.14.50 கோடிஊ 22 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும்

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

சிவகங்கை:சிவகங்கை மாவட்டத்திற்குள் 40 கி.மீ., துாரம் செல்லும் உப்பாற்றினை ரூ.14.50 கோடியில் சீரமைக்கும் பணியை பொதுப்பணித்துறையினர் துவக்கியுள்ளனர்.

மதுரை மாவட்டம், அழகர்கோவில் மலையில் உற்பத்தியாகும் உப்பாறு ஓடையாக மாறி, மேலுார் வழியாக சிவகங்கை மாவட்டம் ஆலங்குடி கண்மாயில் விழும். கண்மாயில் இருந்து வெளியேறும் நீர் நதியாக உருவெடுத்து தமறாக்கி, நல்லாகுளம், பில்லுார், சித்தலுார், வழுதனி, ராஜகம்பீரம், முருகபாஞ்சான் வழியாக மானாமதுரை வைகை ஆற்றில் கலக்கிறது.


22 ஆயிரம் ஏக்கர் பாசனம்

இந்த ஆற்றின் மூலம் 40 கி.மீ., துாரமுள்ள 72 கண்மாய்களை சேர்ந்த 22 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும் ஆற்றின் குறுக்கே உள்ள 7 அணைக்கட்டுகள் மூலம் 12 கண்மாய்கள் நேரடியாக பாசன வசதி பெறும். நபார்டு நிதி உதவி திட்டத்தின் கீழ் சிவகங்கை கீழ்வடிநில வைகை திட்ட சிறப்பு தலைமை பொறியாளர் ஞானசேகரன், செயற் பொறியாளர் சொர்ணவேல், உதவி செயற்பொறியாளர் மலர்விழி, உதவி பொறியாளர்கள் முத்துராமலிங்கம், கண்ணன், சங்கர் சீரமைப்பு பணியை கண்காணிக்கின்றனர்.


உப்பாற்றில்ஆக்கிரமிப்பு அகற்றம்



உப்பாறு ஆற்றின் குறுக்கே துக்காலுார், நல்லாகுளம், பில்லுார், சித்தலுார், வழுதணி, செய்களத்துார் உட்பட 7 இடங்களில் உள்ள அணைக்கட்டுகள் புனரமைக்கப்படும். தமறாக்கி அருகே 71 மீட்டர் நீளத்தில் ஆற்றின் குறுக்கே புதிதாக தடுப்பணை கட்டி, அப்பகுதி நிலத்தடி நீர்மட்டம் உயர்த்தப்படும். நாட்டாக்குடி, இலந்தக்குடி கண்மாய்களுக்கு செல்லும் வரத்து கால்வாய்களில் தடுப்பு சுவர் கட்டப்படும். உப்பாறு சீரமைப்பு பணியின் மூலம் ஆற்றினை முற்றிலும் அளவிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி, எல்லை கற்கள் நடவு செய்வதென பொதுப்பணித்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X