வடிகால் வசதி இல்லாமல் ரோடு: மக்கள் எதிர்ப்பு| Dinamalar

வடிகால் வசதி இல்லாமல் ரோடு: மக்கள் எதிர்ப்பு

Added : ஜூலை 20, 2020
Share

திருப்புத்துார்:திருப்புத்துார் நாகராஜன் நகரில் பல ஆண்டுகளுக்குப் பின் புதிய தார் ரோடு அமைக்க அனுமதியானது.

ரோடு போட பழைய ரோட்டை பெயர்த்து எடுக்கும் பணி நேற்று துவங்கியது.அப்பகுதியினர் ரோடு பணிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். நீண்ட காலமாக இப்பகுதிக்குகுடிநீர் இணைப்பு குழாய்,கழிவுநீர்,மழைநீர் வடிகால் அமைக்க கோரிக்கை வைத்து வருகிறோம். இப்போது வடிகால், குடிநீர் குழாய் பதிப்பு இல்லாமல் போடப்படும் புதிய தார் ரோடு விரைவில் சேதமடைந்து விடும். இதனால் எங்களுக்கு புதிய ரோடு வசதியும் பலனின்றி போய் விடும்.

எனவே வடிகால் வசதியுடன் புதிய ரோடு அமைக்க வேண்டும் என்று பேரூராட்சியினரிடம் தெரிவித்தனர்.செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் ஆனந்திஆகியோர் அப்பகுதியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதனையடுத்து அப்பகுதியினர் கலைந்து சென்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X