சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வெறிச்சோடியது ஜூலையில் மூன்றாவது ஊரடங்குமக்கள் ஒத்துழைப்பால் ரோடுகள்

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement
 வெறிச்சோடியது ஜூலையில் மூன்றாவது ஊரடங்குமக்கள் ஒத்துழைப்பால் ரோடுகள்

சிவகங்கை:சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க ஜூலையில் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மக்கள் ஒத்துழைப்பால்ரோடுகள் வெறிச்சோடி காணப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஜூலை முழுவதும் ஞாயிற்றுக் கிழமை களில் முழு ஊரடங்கை அரசு அறிவித்தது. நேற்று மாவட்டம்முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. அத்தியாவசிய பொருட்களான மருந்து,பால் பூத் தவிர அனைத்தும் மூடப்பட்டிருந்தன. பெட்ரோல் பங்குகள்மூடப்பட்டிருந்தது. மக்கள் நடமாட்டம் இல்லாமல் ரோடுகள்வெறிச்சோடி கிடந்தன. இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் சிலநடமாட்டம் காணப்பட்டது.

இந்த வாகனங்களை போக்குவரத்து போலீசார் நிறுத்திஅத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதித்தனர். தேவையின்றி வாகனங்களில் சுற்றியவர்களுக்கு அபராதம் விதிக்க பட்டது. ஞாயிற்றுக்கிழமை என்றால் மக்கள் இறைச்சி கடைகளில் திருவிழா போல் கூடுவர். 3 வது வாரமான நேற்று யாரும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X