3 தலைமுறையாக ரோடே இல்லாத கிராமத்திற்கு ரோடு பணி துவங்கியது | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

3 தலைமுறையாக ரோடே இல்லாத கிராமத்திற்கு ரோடு பணி துவங்கியது

Added : ஜூலை 20, 2020
Share
மானாமதுரை:மானாமதுரை அருகே 3 தலைமுறையாக ரோடே இல்லாத 2 கிராமங்களுக்கு இடையே ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மானாமதுரை அருகே உள்ளது ஆவரங்காடு. இந்த கிராமத்திற்கு அருகே 2 கி.மீ, தொலைவில் உள்ளது சின்ன ஆவரங்காடு. இந்த கிராமங்களில் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இந்த இரு கிராமங்களுக்கு இடையே ரோடு வசதி இல்லாததால் கிராம மக்கள் 10 கி.மீ.,சுற்றி வர
 3 தலைமுறையாக ரோடே இல்லாத கிராமத்திற்கு ரோடு பணி துவங்கியது

மானாமதுரை:மானாமதுரை அருகே 3 தலைமுறையாக ரோடே இல்லாத 2 கிராமங்களுக்கு இடையே ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மானாமதுரை அருகே உள்ளது ஆவரங்காடு. இந்த கிராமத்திற்கு அருகே 2 கி.மீ, தொலைவில் உள்ளது சின்ன ஆவரங்காடு. இந்த கிராமங்களில் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இந்த இரு கிராமங்களுக்கு இடையே ரோடு வசதி இல்லாததால் கிராம மக்கள் 10 கி.மீ.,சுற்றி வர வேண்டிய நிலை இருந்தது.

சின்ன ஆவரங்காடு கிராமத்திலிருந்து ஆவரங்காட்டிலுள்ள மயானத்திற்கு இறந்தவர்கள் உடலை கொண்டு செல்லவும் சிரமப்பட்டனர். கிராம மக்கள் கலெக்டர் ஜெயகாந்தனிடம் ரோடு வசதி செய்து தரக்கோரி கோரிக்கை விடுத்தனர்.அவர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சமூக ஆர்வலர் பாலசுப்ரமணியன் மேற்பார்வையில் ரோடு போடும் பணி நடந்து வருகிறது. நடவடிக்கை எடுத்த முதல்வர் பழனிசாமி, கலெக்டர் ஜெயகாந்தன் ஆகியோருக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்து கொண்டனர்.பணி துவக்க விழாவில் ஒன்றிய கவுன்சிலர் சோமசுந்தரம், ஆவரங்காடு ஊராட்சி தலைவர் செல்வம், முன்னாள் தலைவர்சிங்கமுத்து கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X