சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வெளி மாவட்டங்களில் இருந்து வருவோர்களால் கொரோனா பரவல்

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement
சிவகங்கை:வெளி மாவட்டங்களில் இருந்து வாகனங்களில்வருபவர்களால் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.தமிழகத்தில் தென் மாவட்டங்களில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கு இரு சக்கர வாகனங்களில் செல்வோர் எளிதாக போலீசார் சோதனை சாவடி இருந்தாலும் கடந்து விடுகின்றனர்.மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல அரசு தடை விதித்துள்ளது. 'இ' பாஸ்

சிவகங்கை:வெளி மாவட்டங்களில் இருந்து வாகனங்களில்வருபவர்களால் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் தென் மாவட்டங்களில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கு இரு சக்கர வாகனங்களில் செல்வோர் எளிதாக போலீசார் சோதனை சாவடி இருந்தாலும் கடந்து விடுகின்றனர்.மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல அரசு தடை விதித்துள்ளது. 'இ' பாஸ் இருப்பவர்கள் மட்டுமே அவசியத்தின் பேரில் போலீசார் அனுமதிக்க வேண்டும்.

தங்களது மாவட்டத்தை விட்டு வெளியே செல்பவர்களை போலீஸ் சோதனைச்சாவடியில் கண்டு கொள்வதில்லை. குறிப்பாக நான்கு சக்கர வாகனங்களில், வாடகை வாகனங்களில் வருபவர்கள் மட்டுமே விசாரிக்கப்படுகின்றனர். இரு சக்கர வாகனங்களில் வருபவர்களை அந்தந்த மாவட்டத்திலுள்ள வாகனங்களை போலீசார் சோதனை சாவடிகளில் கண்டு கொள்வதில்லை.

வெளி மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள், தொழில் செய்பவர்கள், பணிபுரிபவர்கள் வருபவர்களுக்கு கொரோனா பாதிக்கப்பட்டவர்களாக இருந்தால் அவர்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ளது. இரு சக்கர வாகனங்களையும் மாவட்ட எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் முழுமையாக விசாரித்த பின்னரே அனுமதிக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X