ஆடி அமாவாசையிலும் சுவாமி தரிசனம் போச்சே: மனம் நொந்த பக்தர்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆடி அமாவாசையிலும் சுவாமி தரிசனம் போச்சே: மனம் நொந்த பக்தர்கள்

Added : ஜூலை 20, 2020
Share
சிவகங்கை:கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஹிந்துக்களின் முக்கிய நாளான ஆடி அமாவாசை தினத்தில் தடை தொடர்வதால் மனம் நொந்து போயுள்ளனர்.ஆடி அமாவாசை தினத்தில் இறந்து போன முன்னோர்களைநினைத்து வழிபாடு நடத்த நீர்நிலைகளில் பக்தர்கள் வருவார்கள். குடும்பத்துடன் வரும் அவர்கள்நீர் நிலைகளில் சடங்கு சம்பிரதாயங்களை முடித்த பின்னர் சுவாமி தரிசனம் செய்வார்கள்.இந்தாண்டு கொரோனா வைரஸ்

சிவகங்கை:கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஹிந்துக்களின் முக்கிய நாளான ஆடி அமாவாசை தினத்தில் தடை தொடர்வதால் மனம் நொந்து போயுள்ளனர்.

ஆடி அமாவாசை தினத்தில் இறந்து போன முன்னோர்களைநினைத்து வழிபாடு நடத்த நீர்நிலைகளில் பக்தர்கள் வருவார்கள். குடும்பத்துடன் வரும் அவர்கள்நீர் நிலைகளில் சடங்கு சம்பிரதாயங்களை முடித்த பின்னர் சுவாமி தரிசனம் செய்வார்கள்.

இந்தாண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஆடி அமாவாசை தினமான இன்று (ஜூலை 20)தர்ப்பண நிகழ்ச்சிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரை, சேதுக்கரை, தேவிப்பட்டினம்,காவிரி ஆற்றுக்கரைகளில் மக்கள் கூட்டம் அதிகரிக்கும்.

அதே போல் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகேயுள்ள சுந்தரமகாலிங்கம் கோயில், துாத்துக்குடி மாவட்டம் ஏரல் சேர்மன் அருணாச்சல சுவாமி கோயில், உட்பட சிவன் கோயில்களில் பிரதானமாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வார்கள். சுவாமிக்கு அபிேஷகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை கண்டு மன நிம்மதியடைவார்கள். இந்தாண்டு அதற்கு வாய்ப்பில்லாமல் போனதால் பக்தர்கள் மனம் நொந்த நிலையில் உள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X