1000 உடல்கள் பரிசோதனை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

1000 உடல்கள் பரிசோதனை

Added : ஜூலை 20, 2020
Share
திருவாடானை:திருவாடானை அருகேயுள்ள பண்ணவயலை சேர்ந்தவர் மகாலிங்கம் 48. திருவாடானை அரசு மருத்துவமனையில் துாய்மை பணியாளராக உள்ளார்.இறந்த உடல்களை பிரேத பரிசோதனை செய்யும் போது டாக்டருக்குஉதவியாக செயல்படுகிறார். இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட உடல்களை சளைக்காமல் துாக்கி சென்று படுக்கையில் வைத்து சுத்தம் செய்துள்ளார்.அனாதை உடல்கள், அடையாளம் தெரியாதவை, அழுகிய நிலையில்

திருவாடானை:திருவாடானை அருகேயுள்ள பண்ணவயலை சேர்ந்தவர் மகாலிங்கம் 48. திருவாடானை அரசு மருத்துவமனையில் துாய்மை பணியாளராக உள்ளார்.

இறந்த உடல்களை பிரேத பரிசோதனை செய்யும் போது டாக்டருக்குஉதவியாக செயல்படுகிறார். இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட உடல்களை சளைக்காமல் துாக்கி சென்று படுக்கையில் வைத்து சுத்தம் செய்துள்ளார்.அனாதை உடல்கள், அடையாளம் தெரியாதவை, அழுகிய நிலையில் வரும் உடல்களையும் உதவிக்கு ஆள் இல்லாத போதும் இவரே மனம் தளராமல் பரிசோதனை அறைக்குள் பாதுகாப்பாக வைத்துள்ளார்.

மகாலிங்கம் கூறியதாவது:2005ல் வேலைக்கு சேர்ந்தேன். இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட உடல்களை பரிசோதனை செய்த போது டாக்டருக்கு உதவியாக இருந்துள்ளேன். நள்ளிரவில் உடல்களை கொண்டுவரும் போது துாக்கத்தை இழந்து உடனடியாக மருத்துவமனைக்கு செல்வேன்.ஆண்டவனால் படைக்கப்பட்ட இந்த உடலை நல்லபடியாக அடக்கம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் பணியாற்றுகிறேன், என்றார்.இவரை பாராட்ட அலைபேசி 97873 97207.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X