நம்பிக்கை திருப்புத்துார் விவசாயிகளுக்கு ஈசல் தந்த இந்த ஆண்டு விவசாயம் செழிக்கும்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நம்பிக்கை திருப்புத்துார் விவசாயிகளுக்கு ஈசல் தந்த இந்த ஆண்டு விவசாயம் செழிக்கும்

Added : ஜூலை 20, 2020 | கருத்துகள் (1)
Share
 நம்பிக்கை திருப்புத்துார் விவசாயிகளுக்கு ஈசல் தந்த இந்த ஆண்டு விவசாயம் செழிக்கும்

திருப்புத்துார்:திருப்புத்துார் அருகே விவசாயிகளுக்கு இந்த ஆண்டு நல்ல மழை பெய்யும் என்ற நம்பிக்கையை ஈசல்கள் தந்துள்ளன.

திருப்புத்துார் பகுதி வானம் பார்த்த பூமி என்பதால் நெல் விவசாயம் ஒரு போகம் மட்டுமே நடந்தது. பல ஆண்டுகளாக பருவ மழை பொய்த்ததால் மழைஇன்றி விவசாயிகள் சாகுபடி செய்ய தயக்கம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் கடந்தாண்டு பெய்த மழை விவசாயிகளின் நம்பிக்கையை வளர்த்தது. தற்போதும் அது போன்று அவ்வப்போது மழை பெய்து நம்பிக்கையைத் தருகிறது.

இருப்பினும் பல விவசாயிகள் ஆடிப்பட்டத்திற்கு நிலத்தை பண்படுத்தவில்லை.நேற்று ஊரடங்கின் போதும் பூலான்பட்டி கிராமத்தில் விவசாயக்குடும்பம் தங்களது வயல் வரப்பை சீரமைத்தும், களைகளை அகற்றியும் நிலத்தை ஆடிப்பட்டத்திற்கு தயார் படுத்துவதில் மும்முரமாக இருந்ததை பார்க்க முடிந்தது.

பூலான்பட்டி கலைச்செல்வம் கூறுகையில்,‛ கோடை உழவு 2 முறை செய்து விட்டேன். இந்த ஆண்டு நல்ல மழை இருக்கும் என்று ஈசல் பிடிப்பவர்கள் சொல்கிறார்கள். ஈசல்கள் வலையில் தங்கினால் மழை பெய்யாது, இப்போது வலையிலிருந்து வெளியேறி செல்வதால் நல்ல மழை இருக்கும் என்கிறார்கள். அதனால் நம்பிக்கையுடன் ஆடி 18 ல் ‛அம்மனன்' ரக நெல் விதைக்க போகிறேன்.

கொரோனா காரணமாக வேலையாட்கள் இல்லாமல் குடும்ப உறுப்பினர்களே சமூக இடைவெளியுடன் நின்று வேலை செய்கிறோம், என்கிறார் உற்சாகமாக.வானிலை அறிக்கைகளை மட்டும் நம்பாமல், இயற்கை அசைவுகளை பார்த்து மழை பெய்யும் அளவைக் கணிப்பது இன்றளவும் கிராமங்களில் தொடர்கிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X