கொரோனா பாதித்தவர்களுக்கு தாமதமாகும் உணவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா பாதித்தவர்களுக்கு தாமதமாகும் உணவு

Added : ஜூலை 20, 2020
Share

திருப்புத்துார்:சிவகங்கை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்கள் பலரும் உரிய நேரத்திற்கு உணவு கிடைப்பதில்லை என்று தெரிவித்துள்ளனர்.

சிகிச்சை பெற்ற சிலர் கூறியதாவது: இங்கு சிகிச்சை பெறுபவர்களுக்கு நான்கு வகை கூட்டுக்களுடன் மதிய உணவு வழங்கப்படுகிறது. தேவைக்கு அதிகமாகவே சாப்பாடு உள்ளது. உணவு வீணாக குப்பைக்கு செல்கிறது.இதைத் தவிர்க்கலாம்.காலை உணவு நன்றாக உள்ளதாக கூறியபலரும் காலை உணவு 9:00, மதிய உணவு 2:00 மணிக்குள் வழங்கப்படுகிறது. இரவு உணவு மட்டும் 8:00 மணியிலிருந்து9:30 மணி என தாமதமாக வழங்கப்படுகிறது. இதனால் சர்க்கரை நோயாளிகள் பலரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இரவு 11:00 மணிக்கு மேல் பால் வழங்கப்படுகிறது. சரியான நேரத்திற்கு உணவு வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும் என சிகிச்சை பெற்றவர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X