வேலி உடைந்த மருதவனம் காளியம்மன் கோயில்: பராமரிப்பில்லாத குடிநீர் குளம்

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement
 வேலி உடைந்த மருதவனம் காளியம்மன் கோயில்: பராமரிப்பில்லாத  குடிநீர் குளம்

பரமக்குடி:நயினார்கோவில் மருதவனம் காளியம்மன் கோயில் குடிநீர் குளம் பராமரிப்பின்றி கழிவுநீராக மாறி வருகிறது.

இக் கோயிலில் ஆண்டு தோறும் பல்வேறு விழாக்கள் நடப்பது வழக்கம்.நயினார்கோயில் வாசுகி தீர்த்தக்குளம் போன்று, மருதவனம் காளி கோயில் எதிரில் குளம் உள்ளது. சில வருடங்களுக்கு முன்பு வரை பொதுமக்கள் இக்குளத்தில் உள்ள நீரை குடிநீராக பயன்படுத்தி உள்ளனர்.குளத்தைச் சுற்றி வேலி அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டது.

காலப்போக்கில் குளம் பராமரிப்பின்றி செடி, கொடிகள் படர்ந்து காணப்படுகிறது. மேலும் அருகில் உள்ள கழிவுநீர் குளத்தில் செல்வதாக பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தொடர்ந்து வறட்சி காலங்களிலும் வற்றாமல் அருகில் உள்ள, அப்பகுதி மக்களுக்கு ஊற்றாக விளக்கும் இக்குளத்தை வேலியிட்டு பாதுகாக்க கோயில் மற்றும் ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X