இந்தியாவின் செயலால் ராபர்ட் கிளைவ் சிலையை அகற்ற பிரிட்டன் நீதிமன்றம் மறுப்பு

Updated : ஜூலை 20, 2020 | Added : ஜூலை 20, 2020 | கருத்துகள் (23)
Share
Advertisement

லண்டன் : பிரிட்டன் அரசு 17-ஆம் நூற்றாண்டில் இந்தியாவை ஆண்ட காலத்தில் பெங்கால் கவர்னராக பதவி வகித்தவர் ராபர்ட் கிளைவ். அந்த காலத்தில் அடிமைப்பணி செய்த இந்தியர்கள் மீது ஏகாதிபத்தியத்தை ஏவிய கொடுங்கோலராகப் பார்க்கப்படுபவர் கிளைவ் என்கிறது வரலாறு.



latest tamil news



இவர் மீது இன்னும் பல நாட்டுப்பற்றுள்ள இந்தியர்களுக்கு அதிருப்தி உள்ளது உண்மை. ஆனால் இந்தியாவிலும் இவருக்கு சில ஆதரவாளர்களும் உள்ளனர். இதற்கு உதாரணமாக கோல்கட்டாவில் இவருக்கு சிலை உள்ளது.

பிரிட்டனில் தொழிலாளர் கட்சி இந்தியாவில் அடிமைத்தனத்தை ஊக்குவித்த தங்கள் நாட்டைச் சேர்ந்த பிரபு கிளைவ் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. அதே சமயத்தில் தற்போதைய ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி ராபர்ட்டிற்கு ஆதரவு தெரிவித்து வருகிறது.


latest tamil news


பிரிட்டனின் ஷ்ரூபெரீஸ் ஸ்கொயர் பகுதியில் 1860ம் ஆண்டு கிளைவுக்கு சிலை வைக்கப்பட்டது. பின்னாட்களில் இந்த சிலை பாதுகாக்கப்படவேண்டிய பொங்கிஷங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

தற்போது ஜார்ஜ் புளாயிட் படுகொலையை அடுத்து 'பிளாக் லைப் மேட்டர்ஸ்' அமைப்பு பிரிட்டனில் பிரபலமடையத் தொடங்கியது. அடிமைத்தனத்தை ஊக்குவித்த பெரும் செல்வந்தர்களின் சிலை பிரிட்டனின் முக்கிய பகுதிகளில் இருந்து நீக்கப்பட வேண்டும் என இந்த அமைப்பின் உறுப்பினர்கள் குரல் கொடுத்தனர். இவர்கள் தயாரித்த, நீக்கப்படவேண்டிய சிலைகள் பட்டியலில் லான்ஸ்டர் பகுதியில் உள்ள காந்தியின் சிலையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சில நாட்களுக்கு முன்னர் பிரிட்டனின், பிரிஸ்டல் பகுதியில் அடிமைத்தனத்தால் வளமாக வாழ்ந்த செல்வந்தரான எட்வர்டு கால்ஸ்டன் சிலை சிலை உடைக்கப்பட்டு கடலில் வீசப்பட்டது. இதற்கு போரிஸ் ஜான்சன் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் ஷ்ரூபெரீஸ் ஸ்கொயர் பகுதியிலுள்ள ராபர்ட் கிளைவின் சிலையும் அகற்றபடவேண்டும் என இந்த அமைப்பு வழக்கு தொடர்ந்தது. பிரிட்டன் கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கத்தால் அவதியுற்ற இந்தியாவிலேயே கிளைவ் சிலை அகற்றப்படவில்லை. ஆக பிரிட்டனில் ஏன் அகற்ற வேண்டும் என வழக்கறிஞர்கள் வாதிட்டனர். இதனை ஏற்ற நீதிபதி கிளைவ் சிலையை ஷ்ரூபெரீஸ் ஸ்கொயர் பகுதியில் இருந்து அகற்ற மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
25-ஜூலை-202015:53:37 IST Report Abuse
M.COM.N.K.K. இறப்பிற்கு பின் அவனை நாம் இறைவனாகவே பார்க்க வேண்டும். இறைவனடி சேர்ந்தவர்களை நாம் இறைவனாகவே பார்ப்போம் அதில் தவறேதும் இல்லை சிலை எப்போதும் சிலையாகவே இருந்துவிட்டுப்போகட்டுமே.
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
23-ஜூலை-202015:17:09 IST Report Abuse
skv srinivasankrishnaveni சிலைகல்வச்சேதான் இந்தியர்கள் நாசமாபோறானுக கன்றாவியா இல்லீயா இவன் எல்லாம் என்ன பெரிய vip
Rate this:
Cancel
20-ஜூலை-202016:44:12 IST Report Abuse
ஆப்பு ஆண்ட பரம்பரைன்னு சொல்லிக்க அவனுங்களுக்கு ஒரு நாலு பேர் வேணாமா? இங்கே வெச்சிருக்க்ய்ற ஆண்டைகளின் சிலைகளை எடுக்கச் சொன்னா ஒத்துப்போமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X