மணல் கடத்திய 3 லாரிகள் பறிமுதல்| Dinamalar

மணல் கடத்திய 3 லாரிகள் பறிமுதல்

Added : ஜூலை 20, 2020
Share

பரமக்குடி:சிவகங்கை மாவட்டத்தில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட கமுதக்குடி வைகை ஆறு வழியாக அனுமதியின்றி மணலை கடத்தி வருவதை சிலர் வாடிக்கையாக கொண்டுஉள்ளனர்.

இதனால் கமுதக்குடி கிராம மக்களுக்கும், லாரி ஓட்டுனர்களுக்கும் இடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்தது.நேற்று முன்தினம் கமுதக்குடி கிராம மக்கள் தங்கள் பகுதியில் லாரி களை கொண்டு வருவதால் ரோடு, பாலம் சேதம் ஆவதுடன், குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்படுவதாக தாசில்தார், டி.எஸ்.பி.,ஆகியோரிடம் மனு அளித்தனர்.நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு கமுதக்குடி வைகை ஆறு பகுதியில் ரோந்து சென்ற டி.எஸ்.பி.,வேல்முருகன் அனுமதியின்றி மணல் அள்ளி வந்த 3 லாரிகளை பறிமுதல் செய்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X