காரைக்குடியில் வெட்டுக்கிளி படையெடுப்பா விவசாயிகள் அச்சம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காரைக்குடியில் வெட்டுக்கிளி படையெடுப்பா விவசாயிகள் அச்சம்

Added : ஜூலை 20, 2020
Share
காரைக்குடி:காரைக்குடியில், வெட்டுக்கிளிகள் படையெடுத்துள்ளதாக சமூக வலைதளங்களில் பரவும் வீடியோவால் விவசாயிகள்அச்சமடைந்துள்ளனர்.இந்தியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்விவசாய நிலங்களில் வெட்டுக்கிளிகள் ஏற்படுத்திய பாதிப்பால், பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், காரைக்குடி பகுதியில் வெட்டுக்கிளிகள்
 காரைக்குடியில் வெட்டுக்கிளி படையெடுப்பா விவசாயிகள் அச்சம்

காரைக்குடி:காரைக்குடியில், வெட்டுக்கிளிகள் படையெடுத்துள்ளதாக சமூக வலைதளங்களில் பரவும் வீடியோவால் விவசாயிகள்அச்சமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்விவசாய நிலங்களில் வெட்டுக்கிளிகள் ஏற்படுத்திய பாதிப்பால், பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், காரைக்குடி பகுதியில் வெட்டுக்கிளிகள் படையெடுத்துள்ளதாக சமூக வலை தளங்களில் தகவல் பரவுவதால் விவசாயிகள் அச்சத்தில்உள்ளனர்.

காரைக்குடி ஆறுமுக நகர் அருகில் உள்ள அசோக்நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக வெட்டுக்கிளி கூட்டம் அதிகம் காணப்படுகிறது. கூட்டம் கூட்டமாக திரியும் வெட்டுக்கிளிகள் அப்பகுதியில் உள்ள செடிகளை தின்று காலி செய்து வருகிறது. விவசாய அதிகாரிகள் ஆய்வு செய்து விவசாயிகளின் அச்சத்தை போக்க வேண்டும்.வேளாண் உதவி இயக்குனர் சண்முகஜெயந்தி;வெட்டுக்கிளிகளில் 250 வகைகள் உள்ளன. நீளகொம்புள்ள வெட்டுக்கிளிகள் விவசாயத்திற்கு நன்மை செய்யக்கூடியவை. இவை குட்டைகொம்புள்ள வெட்டுக்கிளிகளாக உள்ளன. பாலைவன வெட்டுக்கிளிகள் இங்கு வருவதற்கு வாய்ப்பில்லை. இது எந்த வகையான, வெட்டுக்கிளிகள் என்று உறுதி செய்த பின்னரே தெரிவிக்க முடியும்,என்றார்.வேளாண் இணை இயக்குனர் வெங்கடேசன்:இது பாலைவன வெட்டுக்கிளிகள் அல்ல. இது எருக்கஞ்செடியை மட்டுமே தின்று வாழும் வெட்டுக்கிளிகள். இவை பெரும்பாலும் சிறிய கூட்டமாக வாழும். இந்த வெட்டுக்கிளிகளால் பயிர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. விவசாயிகள் அச்சப்பட தேவையில்லை. என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X