தண்ணீரின்றி அலையும் மயில்கள் வாகனத்தில் சிக்கி இறக்கும் பரிதாபம்

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

ஆர்.எஸ்.மங்கலம்:கடும் வறட்சியால் தண்ணீர் தேடி அலையும் மயில்கள் வாகனங்களில் அடிபட்டு இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய், கோட்டைக்கரை ஆறு, குண்டத்துார் மற்றும் சோழந்துார் ஆற்று பகுதிகளில் உள்ள காட்டு பகுதிகளில் மயில்கள் உள்ளிட்ட பறவை இனங்கள், கீரி, நரி, முயல் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகம் வசித்து வருகின்றனர். கடும் வறட்சியால் குடிதண்ணீர் இன்றி பறவைகளும், வன விலங்குகளும் குளம், குட்டைகளை தேடி அலைந்து வருகின்றன.

குறிப்பாக தேசிய நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளில் செல்லும் குழாய்களில் கசிந்து தேங்கி கிடக்கும் தண்ணீரை பருக மயில்கள் உள்ளிட்ட பறவைகளும், வன விலங்குகளும் ரோட்டை கடந்து செல்ல வேண்டியநிலை உள்ளது. ரோட்டில் அதிவேகமாக செல்லும் வாகனங்கள் மீது மயில்கள் மற்றும் வன விலங்குகள் மோதி இறந்து வருகின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X