சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கழிவால் பாழாகும் தேவிபட்டினம் நவபாஷாண கடற்கரை

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

ராமநாதபுரம்,:தேவிப்பட்டினம் நவபாஷாண கடற்கரை பகுதியில் கழிவுநீர் கலந்து, குப்பை குவிந்து துர்நாற்றம் வீசுகிறது. சுத்தம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் கடலில் உள்ள நவபாஷாணம் நவக்கிரக பரிகார வழிபாடு தலமாக விளங்குகிறது. இங்கு முன்ஜென்ம பாவங்கள் தீர, பிதுர்கடன் கழிக்க,தர்ப்பணம் திருமண தடை, தோஷநிவர்த்தி உள்ளிட்ட பரிகாரபூஜை செய்கின்றனர்.தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். தற்போது கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் தரிசனம், பரிகார பூஜை நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிறப்பு வாய்ந்த நவபாஷாண கடற்கரை பகுதி பராமரிக்கப்படாமல் அப்படியே விட்டுள்ளதால் பாலிதீன், பிளாஸ்டிக் குப்பை குவிந்து அப்பகுதி அசுத்தமாகியுள்ளது. கழிவுநீர் கலப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.ஊரடங்கு காலக்கட்டத்தை பயன்படுத்தி நவபாஷாண கடற்கரை பகுதி யில் உள்ள குப்பையை அகற்றி சுத்தம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X