தமிழ்நாடு

கவனிக்கலாமே: தாமிரபரணி குடிநீருடன் கலந்து வருகிறது உப்பு நீர்

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

நரிக்குடி:சுவையான குடிநீரை வழங்க வேண்டும் என கொண்டுவரப்பட்ட தாமிரபரணி குடிநீரை உள்ளூர் உப்பு தண்ணீருடன் கலந்து சப்ளை செய்வதால் இதன் சுவை மாறி கொடிய நோய்கள் உருவாகுவதால் இதற்கென தனிமேல்நிலை தொட்டி அமைக்க வேண்டும்.

மாவட்டத்தில் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் வழங்க தாமிரபரணி குடிநீர் திட்டம் ஏற்படுத்தப்பட்டு சப்ளை செய்யப்பட்டு வருகிறது. சுவையாக இருப்பதால் சமைக்க, குடிக்க பயன்படுத்தலாம் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இந்த தண்ணீரை உள்ளூர் மேல்நிலை தொட்டியில் இணைத்து உப்பு தண்ணீருடன் கலந்து சப்ளை செய்கின்றனர். சுவை மாறி குடிக்க பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

இதை பயன்படுத்திய பலருக்கு உடல் உபாதைகள் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. தாமிரபரணி குடிநீர் திட்டம் வரப்பிரசாதமாக அமைந்தும் பயனின்றி போனதால் மக்கள் பாதிக்கின்றனர். இதை கருத்தில் கொண்டு உள்ளூர் தண்ணீரை தனியாகவும், தாமிரபரணி தண்ணீரை தனியாக சப்ளை செய்யும் வகையில் மேல்நிலைத் தொட்டி கட்டி இதற்கு தீர்வு காண வேண்டும் .


உடல் உபாதைக்கு வழி



நிலத்தடி நீர் உப்பு தண்ணீராக கிடைப்பதால் சமைக்க குடிக்க பயன்படுத்த முடியவில்லை. இந் நிலையை போக்க கொண்டுவரப்பட்ட தாமிரபரணி திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. சுவையான குடிநீர் கிடைத்தது . ஆனால் காலபோக்கில் உள்ளூர் நிர்வாகங்கள் தாமிரபரணி குடிநீரை உப்பு தண்ணீருடன் கலந்து விடுவதால் சுவை இன்றி பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. பெரும்பாலானோருக்கு உடல் உபாதை ஏற்படுகிறது.

தமிழரசன், தனியார் ஊழியர், நரிக்குடி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X