திருச்சுழி குண்டாற்றில் இறைச்சி கடைகள் : தர்ம சங்கடத்தில் பக்தர்கள் | Dinamalar

திருச்சுழி குண்டாற்றில் இறைச்சி கடைகள் : தர்ம சங்கடத்தில் பக்தர்கள்

Added : ஜூலை 20, 2020
Share

திருச்சுழி:முன்னோர்களுக்கு பக்தர்களால் திதி,தர்ப்பணம் கொடுக்கும் புனித ஆறாக திருச்சுழி குண்டாறு உள்ளது.இங்கு தற்போது இறைச்சி கடைகள் இயங்குவதால் பக்தர்கள் தர்ம சங்கடத்தில் உள்ளனர்.

கொரோனா பரவலைதடுக்கும் வகையில் ஊருக்குள் இருந்த ஒட்டு மொத்த இறைச்சி கடைகளை ஆற்றின் கரை பகுதியில் மாற்றி உள்ளனர். இதை வேறு இடத்தில் அமைக்க கலெக்டருக்கு புகார் அனுப்பியும் நடவடிக்கை இல்லை.
திருச்சுழி தாசில்தார் ரவிச்சந்திரன்: வேறு இடம் கிடைக்காததால் இங்கு அமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. விரைவில் மாற்றப்படும்,என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X