கொரோனா நிதி வரல கடன் சுமையில் மருத்துவமனைகள்

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

அருப்புக்கோட்டை:கொரோனா நிதியை அரசு வழங்காததால் உணவு, மருந்துக்காக செலவிட்ட தொகையை வழங்க முடியாது அரசு மருத்துவ மனைகள் கடன் சுமையில் திணறுகின்றன.

மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம் அரசு மருத்துவமனை களில் கொரோனா பிரிவு செயல்படுகிறது. தொற்று பாதித்தோர் 100க்கு மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர். 'கேட்டரிங்' மூலம் தயார் செய்யும் உணவுக்காக ஒருவருக்கு தினம் ரூ.250 செலவாகிறது. சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், செவிலியர்கள் வீட்டிற்கு செல்ல முடியாமல் தனியார் விடுதிகளில் தங்கி மருத்துவமனை வந்து செல்கின்றனர்.

கேட்டரிங், லாட்ஜ் வாடகை என லட்சக்கணக்கில் கடன் உள்ளது. அரசும் நிதியை வழங்காததால் மருத்துவ மனை நிர்வாகம் விழி பிதுங்கி நிற்கிறது. அரசு உடனடியாக இதன் நிதியை வழங்க வேண்டும்.--

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X